Nissan X-Trail: நிசான் நிறுவனத்தின் எக்ஸ் டிரெயில் கார் மாடல், லிம்டெட் எடிஷனாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.


நிசான் எக்ஸ் டிரெயில்:


நிசான் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ்-டிரெயில் கார் மாடலை, உள்நாட்டு சந்தையில் ரூ.49 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட வாகனமாக, இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படுவதால் இதன் விலை அதிகமாக உள்ளது. தற்போதைய சூழலில் வெறும் 150 யூனிட்கள் என்ற லிமிடெட் எடிஷனாகவே இந்த கார், இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கார் உலகளவில் 7.8 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டில் சிறந்த 5 உலகளாவிய SUV களில் ஒன்றாக உள்ளது. நிசான் எக்ஸ்-டிரெயில் தற்போது அதன் பிரிவில் இந்தியாவில் உள்ள ஒரே  CBU SUV ஆகும்.


எக்ஸ்-டிரெயில் இன்ஜின் விவரங்கள்:


X-Trail ஒரே ஒரு பெட்ரோல் வேரியண்ட் ஆப்ஷனை மட்டுமே வழங்குகிறது. Nissan X-Trail ஆனது 1.5-லிட்டர், 12V மைல்ட் ஹைப்ரிட்  உடன் கூடிய 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது ஒரு மென்மையான CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச ரப்பர்பேண்ட் விளைவைக் கொண்டிருக்கும். இந்த இன்ஜின் நிசானின் மாறுபட்ட கம்ப்ரெஷன் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது, இது நிலைமைகளைப் பொறுத்து சுருக்க விகிதத்தில் மாறுபடும். மேலும்,  163 ஹெச்பி மற்றும் 300 என்எம் பீக் டார்க் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த எஸ்யூவி ஆனது ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது.


 எக்ஸ்-டிரெயில் வடிவமைப்பு, அம்சங்கள்:


எக்ஸ் டிரெயில் ஒரு ஃபுல்லி லோடட் வாகனமாக விற்பனை செய்யப்படுகிறது. மூன்று வரிசைகள், 7 சீட்டர் அமைப்புகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (வயர்லெஸ்), 360 டிகிரி கேமரா, இது இரட்டை-பேன் பனோரமிக் சன்ரூஃப், இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு, 8-இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜர், 12.3-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் டிரைவ் முறைகள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைப்பில் ஏழு ஏர்பேக்குகள், தானியங்கி வைப்பர்கள், EBD உடன் ABS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இழுவைக் கட்டுப்பாடு மற்றும் முன் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. மூன்று வரிசை SUV 3 ஆண்டுகள்/ 1 லட்சம் கிமீ வாரண்டி மற்றும் சாலையோர அசிஸ்டண்ட்ஸ் போன்ற நிலையான சலுகைகள் உடன் விற்பனை செய்யப்படுகிறது.  முத்து வெள்ளை, ஷாம்பெயின் சில்வர் மற்றும் டயமண்ட் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களை வாங்குபவர்கள் தேர்வு செய்யலாம். நிசான் நிறுவனத்தின் இந்த முதன்மையான வாகனம்,  டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஜீப் மெரிடியன் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு  போட்டியாக அமைந்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI