இந்தியாவில் கிருஸர் பைக் வகைகளில் புதிதாக களம் இறங்கியுள்ளது ஹங்கேரி நாட்டை சேர்ந்த கீவே நிறுவனம். அந்த நிறுவனத்தின் Keeway V302C பைக்கிற்கு உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அந்த பைக்கை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். 


கீவே V302C பைக்


இந்த நிறுவனம் தற்போதுதான் இந்தியாவிற்கு வந்துள்ள காரணத்தால் தொடக்கத்தில் பெனெல்லி நிறுவனத்தின் ஷோரூம்களில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. அங்கேயே சர்வீஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. பிறகு இந்த வாகனத்தின் வரவேற்பு மக்களிடையே எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து தனியாக ஷோரூம் தொடங்கி விற்பனை செய்யலாமா இல்லை திரும்பி ஹங்கேரிகே போகலாமா என்று முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பைக்கின் விலை 3.89 லட்சம் ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 



முன்பதிவு துவக்கம்


இந்த கீவே நிறுவனம் ஹங்கேரி நாட்டை சேர்ந்த நிறுவனம் என்றாலும் இந்த நிறுவனம் இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த பெனெல்லி நிறுவனம் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஒரு நிறுவனமாகும். இந்த பைக்கின் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. இந்த பைக்கை முன்பதிவு செய்ய 10 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: சதுரங்க வேட்டையை மிஞ்சும் நிஜக்கதை! துபாய் தப்பிச் சென்றாரா ஐஎஃப்எஸ் இயக்குனர்? தீயாய் பரவும் தகவல்!


பைக் டிசைன்


இந்த பைக்கை ஆன்லைன் மூலம் புக் செய்யலாம். இல்லையெனில் பெனெல்லி நிறுவனத்தின் ஷோரூமிற்கு சென்றும் முன்பதிவு செய்யலாம். இந்த பைக் ஒரு கிரூஸர் பைக்கிற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆனால் இது எடை குறைவான ஒரு கிரூஸர் பைக்காக இருக்கின்றது. இதன் மொத்த எடை 167கிலோவாக உள்ளது. சாதாரணமாக பார்க்கையில் குறைவு என்றாலும் ஒரு க்ரூஸர் பைக்காக இதன் எடை கொஞ்சம் குறைவு என்றே கருதப்படுகிறது. இதன் சீட் 690mm உயரம் கொண்டுள்ளது. இதன் வீல் பேஸ் 1,420mm உள்ளது. இதற்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் 158mm கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் முன்பக்கம் 16 இன்ச் அலாய் வீல் மற்றும் பின்பக்கம் 15 இன்ச் அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. 



என்ன சிறப்பம்சங்கள்


பைக்கின் பாதுகாப்பிற்காக டூயல் சேனல் ABS பிரேக் வசதி மற்றும் 300mm முன்பக்க சிங்கள் டிஸ்க், 240mm பின்பக்க சிங்கள் டிஸ்க் பிரேக் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக முன்பக்கம் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஸன் வசதியும், பின்பக்கம் டெலெஸ்கோபிக் காயில் ஸ்ப்ரிங் வசதியும் இடம் பெற்றுள்ளன. இதனால் இதன் ரைடிங் அனுபவம் சிறப்பாக அமைகிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பைக்கில் V302C ட்வின் சிலிண்டர் லீகுய்ட் கோல்டு 8 வால்வு SOHC என்ஜின் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் அதிகபட்ச பவராக 29.5 BHP மற்றும் டார்க் 26.5 NM என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பைக்கில் 6 கியர் வரை உள்ளது. இதில் பெல்ட் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.


இந்த பைக் மட்டுமின்றி கீவே நிறுவனம் பல புதிய பைக்குகளை இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் வெளியிட தயாராகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அதில் இரண்டு ரெட்ரோ ஸ்ட்ரீட் கிளாசிக் பைக்கும், ஒரு நேக்கட் ஸ்ட்ரீட் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் போன்றவை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI