Amy Jackson in A.L. Vijay movie: இயக்குனர் விஜயின் அடுத்த ஹீரோயின் எமி ஜாக்சன் - தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி 


வெளிநாட்டு மாடலாக இருந்தாலும் நமது தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய இடம் வகித்த நடிகை எமி ஜாக்சன். 2010ம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதராசபட்டினம். இந்த படம் ஆங்கிலேயர்கள் பற்றின ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் ஒரு லண்டன் மாடல் அழகியும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுமான எமி ஜாக்சனை அழைத்து வந்து படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் ஏ.எல். விஜய்.


   



லண்டன் அழகியின் சினிமா பயணம்:


எமி ஜாக்சன் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவந்தார். அவர் அடுத்து அடி எடுத்து வைத்தது பாலிவுட்டில். அவர் ஹிந்தி திரையுலகில் நடித்த முதல் படமான 'ஏக் தீவானா தா'படத்திற்கு பிறகு மிகவும் பிஸியாக ஆகிவிட்டார். பாலிவுட் மட்டுமின்றி ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் விக்ரம், தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின் போன்ற முன்னணி ஹீரோக்களோடு கைகோர்த்து நடித்துள்ளார். அது மட்டுமின்றி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 2.0 படத்திலும் நடித்துள்ளார். அதற்கு பிறகு சினிமாவில் நடிக்க ஒரு பிரேக் எடுத்து கொண்ட நடிகை எமி ஜாக்சன்.  


 






ரீ என்ட்ரி கொடுக்கும் எமி ஜாக்சன் :


எமி ஜாக்சன் தற்போது ஒரு குழந்தைக்கு தாயக உள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவரை தமிழ் சினிமா பக்கம் அழைத்து வந்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். எமியை அறிமுகம் செய்த ஏ.எல். விஜய் தற்போது தனது அடுத்த படத்தை இயக்க ரெடியாகி உள்ளார். அவரின் அடுத்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இப்படம் குறித்த வேறு எந்த தகவலும் இது வரையில் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.