Auto Expo 2023 LIVE: ஆட்டோ எக்ஸ்போவில் டாடா சியாரா இவி சொகுசு கார்

Auto Expo 2023 LIVE Updates: கடந்த மூன்று வருட காத்திருப்புக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சியான 'ஆட்டோ எக்ஸ்போ' (ஆட்டோ எக்ஸ்போ 2023) இன்று முதல் தொடங்குகிறது.

ABP NADU Last Updated: 11 Jan 2023 05:53 PM
ஆட்டோ எக்ஸ்போவில் டாடா சியாரா இவி சொகுசு கார்

 


டாடா நிறுவனத்தின்  சியாரா இவி மற்றும் ஹாரியர் இவி ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கீவே ரெட்ரோ எஸ்.ஆர்.250 அறிமுகம்

பென்லீ சகோதரி நிறுவனமான கீவே நிறுவனத்தின் கீவே ரெட்ரோ எஸ்.ஆர்.250 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்றுள்ள அதிநவீன மோட்டார் சைக்கிள்

ஆட்டோ 2023 எக்ஸ்போவில் அதிநவீன இரு சக்கர வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆசியாவில் முதன்முறையாக அறிமுகமாகும் லெக்சஸ் ஆர்.எக்ஸ். 500எச்

இந்தியா உள்பட ஆசியாவிலே முதன்முறையாக லெக்சஸ் ஆர்.எக்ஸ். 350 எச் மற்றும் லெக்சஸ் ஆர்.எக்ஸ்.500 எச் கார்கள் அறிமுகமாகிறது.

லெக்சஸ் ஆர்.எக்ஸ். 500 எச் அறிமுகம்

டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சின் மற்றும் பின்புறத்தில் மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட லெக்சஸ் ஆர்.எக்ஸ் 500 எச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Auto Expo 2023 LIVE: ஹூண்டாய் ஐகானிக் EV5..!

ஹுண்டாய் நிறுவனம் தனது EV5 என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் நிறுவனத்தின் முதல் இ-ஜிஎம்பி இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

Auto Expo 2023 LIVE: ஒருமுறை சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்கள்.. ஆச்சரியப்பட வைக்கும் மாருதி EV X ..!

மாருதி சுஸுகி அவர்களின் கான்செப்ட் கார் EVX ஐ அறிமுக நிகழ்வில் காட்சிப்படுத்தியது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்கள் செல்லும். இது 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும்.

Auto Expo 2023 LIVE: 14 ஸ்பீக்கர்... கைரேகை சென்சார்...! அறிமுகமான லேண்ட் க்ரூஸர் LC300..!

லேண்ட் க்ரூஸர் LC300 காரில் JBL 14 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது, இது ஆஃப் ரோடிங்கின் போது நன்றாக வேலை செய்கிறது. இந்த காரில் கைரேகை சென்சாரும் பொருத்தப்பட இருக்கிறது. 

Auto Expo 2023 LIVE: 14 ஸ்பீக்கர்... கைரேகை சென்சார்...! அறிமுகமான லேண்ட் க்ரூஸர் LC300..!

லேண்ட் க்ரூஸர் LC300 காரில் JBL 14 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது, இது ஆஃப் ரோடிங்கின் போது நன்றாக வேலை செய்கிறது. இந்த காரில் கைரேகை சென்சாரும் பொருத்தப்பட இருக்கிறது. 

Auto Expo 2023 LIVE: டொயோட்டா Land Cruiser.. காரின் புகைப்படத்தை கீழே பார்க்கவும்...!

டொயோட்டா Land Cruiser.. காரின் புகைப்படத்தை கீழே பார்க்கவும்...!


Breaking News Live : அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Auto Expo 2023 LIVE: 2025க்குள் வெளியிடப்படும் மாருதி EV X..!

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் மாருதி தனது EV எக்ஸ்-ஐ அறிமுகப்படுத்திய நிலையில், இந்த காரானது வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் சந்தைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Auto Expo 2023 LIVE: மாருதி தனது கான்செப்ட் எலக்ட்ரிக் காருக்கு EV X என்று பெயரிட்டுள்ளது..!

மாருதி தனது கான்செப்ட் எலக்ட்ரிக் காருக்கு EV X என பெயரிட்டுள்ளது. இதை மாருதி சுசுகியின் இந்திய நிறுவனத்தின் எம்டி & சீஇஓ ஹிசாஷி டேகுச்சி EVX எலக்ட்ரிக் SUV கான்செப்ட்டை களமிறக்குகிறார். 



Auto Expo 2023 LIVE: ஃப்ளெக்ஸ் எரிபொருள் கார்களைக் காட்டும் டொயோட்டா..!

ஃப்ளெக்ஸ் எரிபொருள் கார்களைக் காட்டும் டொயோட்டா..!



Auto Expo 2023 LIVE: டொயோட்டா ஃப்ளெக்ஸ்.. கண்ணை கவரும் வண்ணம்..!

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் டொயோட்டா நிறுவனம் காட்சிப்படுத்த நிறைய  கார்களை கைவசம் வைத்துள்ளது. இருப்பினும், டொயோட்டா நிறுவனம் நீல நிறத்தில் கண்ணை கவரும் வகையில் ஃப்ளெக்ஸ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 



Auto Expo 2023 LIVE: எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்கிய மாருதி..!

இன்று ஆட்டோ எக்ஸ்போ கோலாகலமாக தொடங்கிய நிலையில், மாருதி தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்கியது. 

ஆட்டோ எக்ஸ்போ என்றால் என்ன..?

ஆட்டோ எக்ஸ்போவின் முக்கிய நோக்கம், ஆட்டோமொபைல் துறையில் உள்ள நிறுவனங்கள் தங்களின் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதற்கும், உலகெங்கிலும் உள்ள சாத்தியமான வாங்குவோர் மற்றும் தொழில் கூட்டாளர்களுடன் இணைவதற்கும் ஒரு தளத்தை ஏற்படுத்துவதாகும். ஆட்டோ எக்ஸ்போ பல்வேறு உற்பத்தியாளர்களின் சமீபத்திய வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பார்க்க பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கிறது.


கார்களை காட்சிப்படுத்துவதைத் தவிர, ஆட்டோ எக்ஸ்போவின் மற்றொரு முக்கிய அம்சம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் முக்கிய கொள்கை அறிவிப்புகள் ஆகும். 

Auto Expo 2023 LIVE: இன்று ஆட்டோ எக்ஸ்போ 2023 இன் முதல் நாள்..!

 மாருதி சுஸுகி, டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், எம்ஜி, கியா, ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் பிஒய்டி போன்ற பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கின்றன. இருப்பினும், மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளன. 

Auto Expo 2023 LIVE: ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிம்னி 5-டோர்..!

மாருதி சுஸுகி இன்று ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜிம்னி 5-டோர் அல்லது பலேனோ கிராஸை காட்சிப்படுத்தும். இருப்பினும் இந்த வகை கார்கள் சந்தையில் அறிமுகப்படுத்த இன்னும் சில மாதங்கள் ஆகும். 

Auto Expo 2023 LIVE: புதிய வாகனங்களை காட்சிப்படுத்த காத்திருக்கும் முக்கிய வாகன உற்பத்தியாளர்கள்..!

ஆட்டோ எக்ஸ்போ 2023 ல் முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் தங்கள் பிரபலமான தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் எஸ்யூவி ஷோஸ்டாப்பர் காட்சிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. 

Background

Auto Expo 2023 LIVE Updates: கடந்த மூன்று வருட காத்திருப்புக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சியான 'ஆட்டோ எக்ஸ்போ' (ஆட்டோ எக்ஸ்போ 2023) இன்று முதல் தொடங்குகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 இன் 16வது பதிப்பு இம்முறை இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி, புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ உபகரண கண்காட்சியும், கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ மோட்டார் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


ஆட்டோ எக்ஸ்போ 2023 இன் முதல் இரண்டு நாட்கள், ஜனவரி 11 (இன்று) மற்றும் ஜனவரி 12 ஆகியவை ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மூன்றாவது நாளான அதாவது ஜனவரி 13 அன்று வர்த்தகர்களுக்காக திறந்திருக்கும். ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை பொது மக்களுக்கு திறக்கப்படும். ஆட்டோ எக்ஸ்போ மோட்டார் ஷோ காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பொதுமக்களுக்கு பார்வைக்கு திறந்திருக்கும். மேலும் இந்த நிகழ்ச்சியின் கடைசி நாளான ஜனவரி 18ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எந்தெந்த கார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன?


ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் மாருதி சுசுகி, BYD இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, எம்ஜி மோட்டார் இந்தியா, கியா இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் உள்ளிட்டவை அடங்கும். மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 


எந்தெந்த கார்கள் அறிமுகப்படுத்தப்படும்? 


ஆட்டோ எக்ஸ்போவில் வரும் சில பிரத்யேக மாடல்கள் மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர், மாருதியின் கான்செப்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் ஐயோனிக் 5, ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட், கியா கார்னிவல், கியா ஈவி9 கான்செப்ட், எம்ஜி ஏர் ஈவி, எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட். Toyota GR Corolla, Tata Punch EV, Tata Safari facelift, BYD Seal EV உள்ளிட்ட பல கார்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.