இணையதளத்தில் ஆபாசமாக பேசியது தொடர்பாக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவர் மீது இன்று குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் அவருடைய மனைவி கிருத்திகா, “எங்களிடம் சொகுசு கார்கள் எல்லாம் இல்லை. ஒரே ஒரு ஆடி ஏ6 ரக கார் மட்டும் உள்ளது”எனக் கூறியுள்ளார். 


இந்நிலையில் ஆடி கார் சொகுசு காரை இல்லையா? அதன் விலை என்ன? அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


ஆடி ஏ6 வகைகள் மற்றும் விலை? 


பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனத்தின் செடான் வகை கார்களில் ஒன்று ஆடி ஏ6 கார். இந்த காரில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பிரிமியம் பிளஸ் மற்றொன்று டெக்னாலஜி  வகை. இந்த காரின் விலை மதிப்பு இந்தியாவில் 57.08 லட்ச ரூபாய் முதல் 61.81 லட்ச ரூபாய் வரை உள்ளது. இவற்றுடன் சாலை வரி மற்றும் இன்சுரன்ஸ் ஆகியவை கூடுதலாக உண்டு.இவற்றை சேர்த்தால் சென்னையில் இந்த காரின் விலை 69 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாயாக உள்ளது. 




ஆடி ஏ6 காரின் சிறப்பு அம்சங்கள்?


ஆடி ஏ6 காரில் 4 வகை கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. வையர்லெஸ் மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி, முன் சீட் டெக்னால்ஜி கொண்டுள்ளது. அத்துடன் 10 இன்ச் டிஸ்பிளே உடன் கூடிய ஒரு ஆடியோ சிஸ்டமும் இதில் உள்ளது. 8 ஏர்பேக், முன்னாள் மற்றும் பின்னாள் பார்க்கிங் செய்ய உதவி செய்யும் சென்சார்களும் இதில் உள்ளது. இந்த காரின் எஞ்சின் 1984 சிசி ஆக உள்ளது. மேலும் இந்த காரில் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை 6.8 விநாடிகளில் எட்ட முடியும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்பீட் கியர் பாக்ஸ் சிஸ்டத்துடன் இக்கார் செயல்படுகிறது. அனைத்து கார் கதவு ஜன்னல்களும் பவுர் விண்டோவாக செயல்படுகின்றன. 



இவை தவிர திருடி போகாமல் பாதுகாக்க உள்ள டெக்னாலஜி மற்றும் 14 ஸ்பீக்கர் வசதிகளும் இந்த காரில் உள்ளது பெரிய சிறப்பு அம்சமாக உள்ளது. இந்த காரின் டாப் ஸ்பீட் 250 கிலோ மீட்டராக கூறப்படுகிறது. 


இந்தக் காருடன் ஒப்பிடப்படும் கார்கள் என்னென்ன?


ஆடி ஏ6 ரக காருடன் ஒப்பிடப்படும் கார்கள் மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்கள், பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் மற்றும் ஜாக்வார் எக்ஸ்எஃப் ஆகியவை ஆகும். 




இப்படி சொகுசு கார்களில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தக் காரின் விலை மற்றும் இது போட்டிப் போடும் கார்களை வைத்து பார்த்தால் இந்த சொகுசு காராக தான் இருக்க முடியும் என்பது தெளிவாக தெரிகிறது. 


மேலும் படிக்க: ஆபாச யூட்யூபர் பப்ஜி மதன் குண்டர் சட்டத்தில் கைது


Car loan Information:

Calculate Car Loan EMI