இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருந்தது.






இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து வீரர்களும் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கடந்த ஜூன் 25-ம் தேதி இங்கிலாந்து விரைந்தனர். கொரோனா பரவலை முன்னிட்டு, அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். வரும் ஜூலை 8-ம் தேதி முதல் போட்டி நடக்க இருந்த நிலையில், முறையாக நடைபெற்ற பரிசோதனை முடிவில், 3 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் 4 அணி அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.






இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திட்டமிட்டபடி இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கும் ஒரு நாள் தொடர் நடைபெறும். இந்த தொடரில் விளையாட இருக்கும் வீரர்களின் பெயர் பட்டியல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்படும்” என அறிவித்துள்ளது.  






அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இப்போது அனைத்து வீரர்களும் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கார்டிஃப் மைதானத்தில் நடைபெற இருக்கும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது. மேலும், கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் விரைவில் இந்த தொடரில் விளையாட அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கு முன்பு, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதில், மூன்று டி-20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.  2 ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டி மழையால் தடை செய்யப்பட்டது.