Honda CB300F: ஹோண்டா பைக் வாங்க இதுதான் சரியான நேரம்.. ரூ.56,000 விலை குறைப்பு, CB300F மாடல் அறிமுகம்

ஹோண்டா நிறுவனம் தனது புதிய CB300F பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஹோண்டா நிறுவனம் தனது புதிய CB300F பைக் மாடலின் விலையை, ஏற்கனவே அறிவித்ததை காட்டிலும் 56 ஆயிரம் ரூபாய் குறைத்து நிர்ணயித்துள்ளது.

Continues below advertisement

ஹோண்டா CB300F:

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தனது, MY2023 வெர்ஷனை சேர்ந்த CB300F மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தல் புதிய ஸ்ட்ரீட் ஃபைட்டரை MY2023க்கு OBD-II-விற்கு இணக்கமான பவர்டிரெய்னுடன் கொண்டு வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் புதிய பைக்கிற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில்,  ரூ.56 ஆயிரத்தை ஹோண்டா நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கான காரணம் எதையும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

விலை விவரங்கள்:

புதிய ஹோண்டா CB300F மாடலின் விலை இந்தையில்  1.7 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாடலை சேர்ந்த டீலக்ஸ் வேரியண்டின் விலையை ரூ.2.26 லட்சம் எனவும், டீலக்ஸ் ப்ரோ வேரியண்டின் விலையை ரூ.2.29 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலைகுறைப்பு, விற்பனையை ஊக்கப்படுத்த ஹோண்டா நிறுவனம் எடுத்த நடவடிக்கை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் CB300F மீது குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.50,000-ஐ ஆண்டு இறுதி தள்ளுபடியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: KTM 390 Duke: வந்தது 3-ஆம் தலைமுறை கேடிஎம் 390 டியூக் பைக்.. கூடுதல் திறன் கொண்ட இன்ஜின், புக்கிங் தொடங்கியது..!

இன்ஜின் விவரங்கள்:

2023 ஹோண்டா CB300F மாடலில் OBD-II A விதிகளுக்கு பொருந்தும் வகையிலான என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இதில் இடம்பெற்றுள்ள 293.52சிசி, சிங்கிள் சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜின், 24.13 bhp மற்றும் 25.6Nm ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 17-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் அப்சைட்-டவுன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ப்ரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

வாகனத்தின் மற்ற அம்சங்களை பொருத்தவரையில் இதில் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ், கியர் பொஷிஷன் இண்டிகேட்டர்,  அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் முழுமையான எல்.ஈ.டி. லைட்டிங், டிஜிட்டல் கன்சோல், கனெக்டிவிட்டி உள்ளிட்ட ஆப்ஷன்களும் இடம்பெற்றுள்ளன. அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரகாசம் கொண்ட முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் இணைப்புக்கான ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் அடங்கும்.  ஸ்போர்ட்ஸ் ரெட், மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள நபர்கள் டீலர்ஷிப் கடைகளுக்கு சென்று வாகனத்தை முன்பதிவு செய்யலாம்

Continues below advertisement
Sponsored Links by Taboola