கேடிஎம் நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை 390 டியூக் பைக் மாடலின் விலையை 3 லட்சத்து 10 ஆயிரத்து 520 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது.


கேடிஎம் மூன்றாம் தலைமுறை 390 டியூக்: 


ஸ்போர்ட்ஸ் செக்மண்டில் இந்திய சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் 390 டியூக் பைக் மாடல் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளானது கூடுதல் அம்சங்களுடன் ஏற்கனவே இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வழக்கத்திற்கு மாறாக எந்தவித பிரமாண்ட அறிவிப்பும் இன்றி, கடந்த மாதம் 22ம் தேதி மூன்றாம் தலைமுறை 390 டியூக் பைக் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது விலை விவரங்களும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியாகியுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:


இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 399cc இன்ஜின் 45hp மற்றும் 39Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது முந்தைய மாடலில் இருப்பதை விட 1.5hp மற்றும் 2Nm டார்க் திறன் அதிகமாகும். இந்த இன்ஜின் முற்றிலும் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் வைக்கப்பட்டுள்ளது. அலுமினிய சப்-ஃபிரேம் மற்றும் புதிய சஸ்பென்ஷனைக் கொண்டுள்ளது. அண்மையில் வெளியான TVS Apache RTR 310 பைக்கிற்கு போட்டியாக, புதிய கேடிஎம் 390 டியூக் பைக் மாடல் அமையும் என கூறப்படுகிறது. 


வடிவமைப்பு அம்சங்கள்:


வாகனத்தின் ஸ்டலிங் மற்றும் அம்சங்களிலும் சில புதுப்பிப்புகள் உள்ளன. எரிபொருள் டேங்க் மற்றும் முகப்பு விளக்கு ஆகியவை மாற்றம் பெற்றுள்ளன. மழை, தெரு மற்றும் ட்ராக் என மூன்று ரைட் மோட்களை பெற்றுள்ள இந்த வாகனம்,  ஒவ்வொரு ரைடிலும் கடந்த மாடலில் இருந்ததை விட கூர்மையான பவர் டெலிவரியை வழங்குகிறது. புதிய 390 டியூக் கார்னர் ஏபிஎஸ் மற்றும் இரு-திசை விரைவு ஷிஃப்டரையும் கொண்டுள்ளது.


விலை விவரங்கள்:


இந்திய சந்தையில் இதன் விலை 3 லட்சத்து10 ஆயிரத்து 520 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.  கேடிஎம் நிறுவனம் 390 டியூக் பைக்குடன் கூடுதலாக,  மேம்படுத்தப்பட்ட புதிய 250 டியூக் பைக் மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம், அலுமினிய சப்-ஃபிரேம், சஸ்பென்ஷன் ஆகியவை பெற்றுள்ளன. உருவத்தில் 390 போலவே தோற்றமளிக்கிறது. இருப்பினும், அதே பழைய 249cc இன்ஜின் தான்  இடம்பெற்றுள்ளது. இதன் விலை 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வேரியண்டை விட வெறும் ரூ.779 அதிகம் ஆகும். இந்த இரண்டு பைக் மாடல்களையும் ரூ.4,500 செலுத்தி விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு, கேடிஎம் நிறுவனத்தின் இரண்டு பைக்குகளின் விநியோகமும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI