GST on Diesel Vehicle: டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிப்பதால்,  கார் போன்ற வாகனங்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார். டீசல் வாகனங்களுக்கு  10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்க  நிதி அமைச்சகத்திடம் இன்று மாலை பரிந்துரை  கடிதம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் டீசலில் இயங்கும் கார்கள்,  லாரிகள் உள்ளிட்ட வாகனங்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


மத்திய அமைச்சர் சொல்வது என்ன?


டெல்லியில் நடைபெற்ற இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் 63வது மாநாட்டில் பேசிய நிதின் கட்கரி, “கார் உற்பத்தியாளர்களை எச்சரித்த மத்திய அமைச்சர், வரி உயர்வுக்குப் பிறகு டீசல் வாகனங்களை விற்பது கடினமாகிவிடும். விரைவில் டீசல் பயன்பாட்டை  நிறுத்த முயலுங்கள், இல்லையெனில் நாங்கள் வரியை அதிகரிப்போம். அப்போது டீசல் வாகனங்களை விற்பது உங்களுக்கு கடினமாகிவிடும். மாசுபாட்டிற்காக டீசல் வாகனங்கள் மீத்யு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும். இந்த முன்மொழிவை இன்று நிதியமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ள்ளேன்" என்றார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு டீசல் வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கும், இந்திய சாலைகளில் அதிக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு உந்துதலாக கருதப்படுகிறது.


இறக்குமதி சவாலானது:


இந்தியா 89 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகும். எனவே, பிரதமர் நரேந்திர மோடி மாற்று மற்றும் உயிரி எரிபொருளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளார். கச்சா எண்ணெய் இறக்குமதியால் செலவு அதிகரிக்கிறது.  டீசல் ஒருவழியாக அல்லது வேறு வழியின்றி நிறுத்தப்பட வேண்டும். தொழில்துறையினர் முன்முயற்சி எடுக்க வேண்டும். டீசல் அல்லது டீசல் வாகனங்களுக்கு பை-பை சொல்லுங்கள், அல்லது பிஎஸ்4 போன்ற விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். பேருந்துகள் மற்றும் லாரிகள் ஏன் எத்தனாலில் இயங்க முடியாது?” என்றும் கேள்வி அமைச்சர் எழுப்பியுள்ளார்.


சரிந்த பங்குகள்:


அமைச்சரின் பேச்சு வெளியான சிறிது நேரத்திலேயே, வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் அசோக் லைலேண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.5 முதல் 4% வரை வீழ்ச்சி கண்டுள்ளன. டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களான ஸ்வராஜ் இன்ஜின்ஸ் மற்றும் எஸ்கோட்ஸ் குபோடா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டன. எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவற்றின் பங்குகளும் 3 முதல் 4 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டன. நாட்டின் மொத்த ஜிடிபியில் ஆட்டோமொபைல் துறை 6 சதவிகிதம் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI