நல்ல நேரம் :


காலை 7.30 மணி 8.30 மணி வரை


மாலை 4.30 மணி 5.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.30 மணி  முதல் 11.30 மணி வரை


மாலை 7.30 முதல் இரவு 8.30 மணி வரை


இராகு :


மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை


குளிகை :


மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் – வடக்கு


மேஷம் :


மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியம் ஒன்று நிறைவேறும். ஆடம்பர பொருட்கள், நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் காக்கும்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பயம் மனதில் குடிகொள்ளும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அடுத்தவர்களின் பணத்திற்காக உத்தரவாதம் அளிக்க வேண்டாம்.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உயர்வான நாள் ஆகும். வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். வாகன சேர்க்கை கிட்டுவதற்கு வாய்ப்பு அதிகம். சொத்து வழி பிரச்சினைகள் நீங்கும்.


கடகம் :


கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை பயக்கும் நாளாக அமையும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கம். அண்டைவீட்டாருடன் நீடித்து வந்த பிரச்சினை சரி ஆகும்.


சிம்மம் :


சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் ஆலய வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அவசியம். தேவையில்லாத விவகாரங்களில் எந்தவித தலையீடும் மேற்கொள்ள வேண்டாம்.


கன்னி :


கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். நீண்டநாட்களாக உங்கள் மனதில் இருந்துவந்த பாரம் குறையும். மனதில் நிம்மதி குடிகொள்ளும். சிக்கல்கள் தீரும்.


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள், தனவரவு, பணவரவு கிட்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலைகளில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. உயரதிகாரிகளுடன் சுமூகமாக செல்வதே நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பதை நல்லது.


தனுசு:


தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உடலில் உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆலய வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.


மகரம் :


மகர ராசிக்காரர்களே இந்த நாகள் உங்களுக்கு செலவு ஏற்படும். அதனால், பண விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்படலாம். இருப்பினும் அதனால் ஆதாயம் உண்டு. சுற்றத்தாரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே நீண்ட நாள் நினைத்த காரியம் தாமதம் ஆகலாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். தொலைபேசி வழித் தகவல்கள் ஆதாயம் தரும். நல்ல சிந்தனைகள் செழிக்க சிவபெருமானை வணங்க வேண்டும்.


மீனம் :


மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அருமையான நாள். அதிர்ஷ்டகரமான நாளாக இந்த நாள் அமையப்போகிறது. வசூலாகாத பணம் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிட்டும். எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் விருத்தியாகும்.


மேலும் படிக்க: IPL Auction 2022: தொடக்கத்திலேயே தட்டித்தூக்கணும்.. ஆனா வீரர்கள் எப்படி? குஜராத், லக்னோ அணிகளின் ஸ்குவாட் விவரம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண