சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் ஒரு செய்தி நிறுவனம் நேரடி ஒளிபரப்பின் போது கேமராவில் பின்னணியில் இரண்டு ஆண்கள் தன்னிச்சையாக முத்தமிடும் ஒரு சிறிய கிளிப் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனா பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா கடந்த பிப்., 4ல் முதல் நடைபெற்று வருகிறது. அப்பொழுது, ஒலிம்பிக்கிற்கான உள்ளூர் கண்காணிப்பு பப் நிகழ்ச்சி ஒன்றில் நிருபர் லோ மின்மின் நிகழ்ச்சி குறித்து நேரடி ஒளிபரப்பு செய்தார்.
கிளிப் நிகழ்ச்சியின் தொடக்கத்தில், நிருபர் லோ மின்மின்பின்னணியில் இரண்டு மனிதர்கள் தீடிரென உள்புகுந்து உதடு டு உதடு முத்தம் கொடுத்து கொள்கின்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு ஸ்வெட்டர் அணிந்த நபர் நிருபரையும் கேமராவையும் பார்த்து விட்டு மற்றொரு அழைத்து கொண்டு வேறு பக்கம் சென்று விடுகிறார். தற்போது இந்த படு வேகமாக வைரலாகி வருகிறது.
பெய்ஜிங்கில் ஓரினச்சேர்க்கை:
சீனாவில் குடியரசில் உள்ள லெஸ்பியன், கே, இருபால் மற்றும் திருநங்கைகள் (LGBT) சட்ட மற்றும் சமூக சவால்களை இன்று வரை எதிர்கொள்கின்றனர். ஒரே பாலின தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது தத்தெடுக்கவோ முடியாது. மேலும் அத்தகைய தம்பதிகள் தலைமையிலான குடும்பங்கள், ஒரே பாலின தம்பதிகளுக்கு அங்கு சட்டப் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளது. LGBT நபர்களுக்கு பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்புகள் இன்றுவரை எதுவும் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்