2022 ஐபிஎல் தொடருக்கு முன்னால், வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இம்முறை 2 அணிகள் புதிதாக சேர்க்கபப்ட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்க உள்ளன. லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் முதல் முறையாக ஐபிஎல் அணிகளை கட்டமைத்துள்ளன. இந்த அணிகளில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் யார் என்பதை காணலாம். 


குஜராத் டைட்டன்ஸ்


ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தக்கவைக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின், புதிதாக சேர்க்கப்பட்ட இரு அணிகளும் 3 வீரர்களை தேர்வு செய்தனர். இதில், ஹர்திக் பாண்டியாவை 15 கோடி ரூபாய்க்கும், ரஷீத் கானை 15 கோடி ரூபாய்க்கும், சுப்மன் கில்லை 8 கோடி ரூபாய்க்கும் எடுத்தனர்.


அதனை அடுத்து ஐபிஎல் ஏலத்தில் மேலும் 20 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. இதனால், மொத்தம் 23 வீரர்களும் 2022 ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது குஜராத் டைட்டன்ஸ்.






அணி விவரம்:


ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரஷீத் கான், சுபம் கில், முகமது ஷமி, ஜேசன் ராய், லாக்கி ஃபெர்குசன், அபினவ் சதாரங்கனி, ராகுல் தெவாத்தியா, நூர் அகமது, சாய் கிஷோர், விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், டோமினிக் டிரேக்ஸ், தர்ஷன் நல்கண்டே, யஷ் தயால், அல்சாரி ஜோஷஃப், பிரதீப் சங்வான், அஷோக் ஷர்மா, டேவிட் மில்லர், சாஹா, மேத்யூ வாடே, வருண் ஆரன், சாய் சுதர்ஷன்


லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ்


ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தக்கவைக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின், புதிதாக சேர்க்கப்பட்ட இரு அணிகளும் 3 வீரர்களை தேர்வு செய்தனர். இதில், கே.எல்.ராகுலை 17 கோடி ரூபாய்க்கும், ஸ்டையோனிஸ்  9.2 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னாய் 4 கோடி ரூபாய்க்கும் தேர்வு செய்தது.


அதனை அடுத்து, ஐபிஎல் மெகா ஏலத்தில் மேலும் 18 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. இதனால், மொத்தம் 21 வீரர்களுடன் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது.






அணி விவரம்


கே.எல் ராகுல் (கேப்டன்), ஸ்டோனிஸ், ரவி பிஷ்னாய், டி காக், மணிஷ் பாண்டே, எல்வின் லூயிஸ், வோஹ்ரா, ஹோல்டர், க்ருணால் பாண்டியா, ஆவேஷ் படோனி, தீபக் ஹூடா, கைலி மேயர்ஸ், கிருஷ்ணப்பா கெளதம், கரண் ஷர்மா, அவேஷ் கான், மார்க் வுட், துஷ்மந்தா சமீரா, அங்கித் ராஜ்புட், ஷபாஸ் நதீம், மயங்க் யாதவ், மோஹ்சின் கான்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண