சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்த 5 நாட்களில் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த ஓராண்டாக கொரோனா காரணமாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் வருவோர், கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். மேலும் படிக்க: Sabarimala Updates: சிறப்பு பேருந்து... கூகுள் பே காணிக்கை... தங்கும் வசதி... - சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்!


இந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில் அதிகளவில் பக்தர்களை அனுமதிக்க  தேவசம் போர்டு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 15ஆம் தேதி கோயிலின் நடை திறக்கப்பட்டு 16ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த 30,000 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் படிக்க: Watch Video | கோயில் யானைக்கு தலை சீவும் பாகன்- வைரல் வீடியோ..!


இந்த நிலையில், சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேவசம் போர்டு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம். பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியில் உள்ள வனப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சன்னிதானத்தில் இரவில் தங்குவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட 10008 ருத்ராட்சைகளால் சிவனுக்கு அபிஷேகம்


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண