பிக்பாஸ் சீசன் 5ல் ‛இன்ப்ளியன்ஸ்’ என்கிற பெயரில் கடுமையான விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சந்தித்த அபிஷேக் ராஜா, இரண்டு முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றும், இரண்டு முறையும் ஓட்டெடுப்பில் வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்ட அவர், நேற்று தன்னுடைய யூடியூப் பக்கத்தில் முதன்முறையாக தோன்றி பேசினார்.

  


இதோ அவர் பேச்சு...


இரண்டாவது முறை மாமியார் வீட்டுக்கு...சாரி... பிக்பாஸ் வீட்டுக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் யாருக்கும் ஹாய் சொல்லல...! அனைவருக்கும் வணக்கம். என்ன இன்னல் வந்தாலும், மனஉளைச்சலும் வந்தாலும் சரி(அவரது நண்பர் குறுக்கிட்டு...‛இன்ப்ளியன்ஸ் பண்ணாதீங்க அபிஷேக்..’ என்கிறார்; ‛செருப்பால அடி நாயே...’ என அவரை ஒதுக்கிவிட்டு பேச்சை தொடர்கிறார்) வாழ்க்கையில் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இந்த மொன்னா நாய்கள் தான், எந்நேரமும் குரூப்பில் என்னை பத்தி பேசுதுங்க. 


நாங்க இப்போது சாப்பிட போகிறோம். எனக்கு காட்டப்படும் அட்டன்ஷனை எப்போதும் எடுத்து குடித்திருக்கிறேன். மறுபடி மறுபடி வாய்ப்புகள் கிடைத்து, அதிலிருந்து நான் என்ன கற்கிறேன் எதை மாற்றுகிறேன் என்பது என் கையில் தான் உள்ளது. இது மாதிரியான நண்பர்களை சம்பாதித்ததை தான் பெரிதாக நினைக்கிறேன். எந்த விளக்கமும் கொடுக்க நான் நேரலையில் வரவில்லை. நன்றி சொல்லவே வருகிறேன். வெற்றி பெற்றவர்களுடன் என்னை திறனாய்வு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. நண்பர்கள் எனக்கு பெரிதும் உதவுகிறார்கள். 



யூடியூப்பிற்கு வர கொஞ்ச நாள் ஆகும். அதுவரை என்னடா கழட்ட போற... என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய இன்ஸ்ட்டா பக்கம், என்னுடைய டைரி மாதிரி. நல்லா இருங்க... ஜாலியா இருங்க.... (இடையில் சில பீப் கமெண்ட்டுகள்). இப்போதைக்கு ஜாலியா ஜில்லி பண்ணிட்டு, லைப்ல என்ன பண்ணலாம் என யோசிப்போம். நேற்று மாநாடு பார்த்தேன். நல்லா இருந்தது. வெங்கட்பிரவு சார் வீட்டுக்கு போய் பார்த்துட்டு, ஒரு மாலை போட்டுட்டு வரணும். தமிழ் சினிமா வேறு லெவலுக்கு திரும்பியிருக்கிறது. 


அனைவருக்கும் நன்றி...இந்த நேரலையில் கூட சிலர் வக்கிரத்தை கொட்டுகிறார்கள். அவர்களும் ஜாலியா இருக்க வேண்டும், என்று கூறி விடைபெற்றார் .


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண