ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2021-22ம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கியது இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி முதல் போட்டி ஆரம்பமாகிறது. 


இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அதிரடியாக பேட்டிங் செய்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 425 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. சிறப்பாக பேட்டிங் செய்த டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், டேவிட் வார்னர் 94 ரன்களும், மார்கஸ் லபுஷானே 74 ரன்களும் எடுத்தனர். 


இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து,. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. மிகவும் பின் தங்கி இருந்த இங்கிலாந்து இன்று நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இன்றைய போட்டி தொடங்கியவுடன் ஆஸ்திரேலியாவுக்கு ப்ரேக்-த்ரூ கொடுத்தார் நாதன் லயன். சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மலானின் (82) விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஷேன் வார்னே, க்ளென் மெக்ரத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பட்டியலில் இணைகிறார் லயன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை எட்டிய 17வது வீரரானார் லயன். 


ஷேன் வார்னே - 708


க்ளென் மெக்ராத் - 563 


நாதன் லயன் - 402*


நீண்ட காத்திருப்பு:






2021-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள், வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதுவே நாதன் லயனின் 399வது விக்கெட். அதனை அடுத்து கிட்டத்தட்ட 326 நாட்கள் காத்திருப்புக்கு பின்பு இன்றுதான் நாதன் லயனுக்கு 400வது விக்கெட் கிடைத்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய லயன் 33 ஓவர்களை விக்கெட் ஏதும் எடுக்காமல் வீசி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய லயனுக்கு, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளும் கிடைத்திருக்கிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் லதனுக்கு 403* விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். 


இந்நிலையில், இங்கிலாந்தின் இரண்டாம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. 10 விக்கெட்டுகள் இழந்து 297 ரன்கள் எடுத்திருக்கும் இங்கிலாந்து, 19 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது. நான்காம் நாள் ஆட்டம் இன்னும் முடியாத நிலையில், இரண்டாம் இன்னிங்ஸ் களமிறங்கும் ஆஸ்திரேலியா, வேகமாக போட்டியை முடித்து வெற்றி காண இருக்கின்றது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண