நாள்: 01.04.2022


நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 வரை


கௌரி நல்ல நேரம் :









மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை


இராகு :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


எமகண்டம் :


காலை 3.00 மணி முதல் காலை 4.00 மணி வரை


சூலம் – மேற்கு


மேஷம் :


இன்று வெற்றிகரமான பலன்கள் காண உறுதியும் திட்டமிடலும் அவசியம். பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும்.


ரிஷபம்:


இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.


மிதுனம் :


இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகலாம் நீங்கள் சமநிலையோடு காணப்படுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள்.


கடகம் :


இன்று பயணம் செய்வதில் முனைந்து இருப்பீர்கள். உங்களைச் சுற்றி மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வீர்கள்.மற்றவர்களுடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வது சிறந்த பலன் தரும்.


சிம்மம்:


இன்று நற்பலன் காண நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் பயனுள்ளதாக இருக்கும். இறை மந்திரம் மற்றும் ஸ்லோகங்கள் கூறுவதன் மூலம் நீங்கள் திருப்தியாக உணர்வீர்கள்.


கன்னி :


இன்று நீங்கள் அதிக முயற்சி எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.


துலாம் :


இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். மறக்கமுடியாத தருணங்களை அனுபவிப்பீர்கள். சவாலான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.


விருச்சிகம் :


முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. இன்று உங்கள் செயல்களில் கவனம் கொள்ள வேண்டிய நாள். உணர்சிவசப்படுவதலை தவிர்க்க வேண்டும். செயல்களை திட்டமிட்டு மேற்கொண்டால் வெற்றி பெறலாம்.


தனுசு :


இன்று சவால்கள் நிறைந்து காணப்படுவதால் சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அமைதியாக இருப்பதன் மூலம் நன்மை பெறலாம்.


மகரம் :


இன்று உங்களுக்கு சீரான பலன்கள் கிடைக்கும் நாள்.இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். இன்று சுப நிகழ்சிகள் நடப்பதற்கான சாத்தியம் உள்ளது.


கும்பம்:


இன்று பதட்டமான மன நிலையில் காணப்படுவீர்கள். அதனால் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைப்பது கடினம். உங்கள் அன்றாட செயல்களை மேற்கொள்ளும்போது கவனம் தேவை.


மீனம்:


இன்று நன்மை தீமை இரண்டும் கலந்த நிச்சயமற்ற பலன்கள் காணப்படும். எல்லா விஷயங்களிலும் பொறுமை மேற்கொள்வதன் மூலம் வெற்றி காணலாம்.




Also Read | Guru Peyarchi 2022: குருபெயர்ச்சியால் எந்த ராசிக்காரருக்கு கோடீஸ்வர யோகம்..? உங்களுக்கு என்ன பலன் தெரியுமா..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண