2022 ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ், ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய சென்னை அணி ஓப்பனர் உத்தப்பா, தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். அவரை அடுத்து களமிறங்கிய மொயின் அலி 35 ரன்களும், சிவம் தூபே 49 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராயுடு தன் பங்கிற்கு 27 ரன்கள் எடுக்க, ஜடேஜா 17 ரன்கள் எடுக்க, தோனி 16* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக தொடங்கிய சென்னை அணி, சிறப்பான ஸ்கோரை எட்டியது.





தோனியின் கடைசி பந்து பவுண்டரியுடன் முடிந்திருக்கும் முதல் இன்னிங்ஸ் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது சென்னை அணி. இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய லக்னோ அணிக்கு ஓப்பனர்கள் ராகுல், டிகாக் சிறப்பான ஓப்பனிங் தந்தனர். இதனால், விக்கெட் இழப்பின்றி 99 ரன்களை எட்டியது அந்த அணி.40 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டான ராகுல் அரை சதம் மிஸ் செய்தார். அவரை அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 5 ரன்களுக்கு வெளியேற, எவின் லூயிஸ் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய அவர், 23 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதனால், கடினமாக இலக்கை நெருங்கியது லக்னோ அணி.






கடைசி ஓவர் வரை தொடர்ந்த பரப்பான ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி இலக்கை சேஸ் செய்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. ஐபிஎல் வரலாற்றில், முதல் முறையாக முதல் இரண்டு போட்டிகளை சென்னை அணி இழந்திருக்கிறது. இனி வரும் போட்டிகளில் சுதாரித்து கொண்டு விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண