மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்காவுக்கு உட்பட்ட ட்வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 


Jhulan Goswami record: மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் எட்டிய முதல் வீராங்கனை... ஜூலன் சாதனை




மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோவிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.


அடிக்கடி ‘கிடுகிடு’வென உயரும் சிமெண்ட் விலை! கட்டுமான பணிக்கு சிக்கல்! இந்த முறை மூட்டை விலை என்ன தெரியுமா?




இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில்  பிரமோற்ச்சவ திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் வீதி உலா நிகழ்வு நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக  ‌7 ஆம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விநாயகர், செல்வ முத்துக்குமார சுவாமி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமி ஆலயத்தில் இருந்து எழுந்தருளி,  நான்கு தேர்களில் அடுத்தடுத்து நிலையில் இருந்து புறப்பட்டு வீதியுலா சென்றது. 


Mowgli Jungle Book : மோக்லி கார்ட்டூன் பார்த்திருப்போம்.. நிஜமான மோக்லியின் கதை தெரியுமா?




திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் படித்து இழுத்து துவக்கி வைத்தார்.தேர் நான்கு மாடவீதிகளில் வழியாக  வலம் வந்துஇந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தாள், திருமணதடை குழந்தை பிறப்பு, தீராத நோய்கள் தீருவது, உள்ளிட்ட வேண்டிய வரன்கள் நிறைவேறுவதாக ஐதீகம் உள்ளதால்,  வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள், தமிழ்நாட்டில் பல மாவட்ட, இந்தியாவின் கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து  வந்திருந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து வழிப்பட்டனர்.


Suriya on Political Entry: என்ன பார்த்தா எப்படி தெரியுது? - அரசியல் குறித்த கேள்விக்கு பளிச் பதில் தந்த சூர்யா..