மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்றதும், பழமையும் வாய்ந்த  அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்தாண்டும் துலா உற்சவம் கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி, முதல் நாள் தீர்த்தவாரியுடன் ஆரம்பம் ஆனது. இதில் கடைசி பத்துநாள் உற்சவம் கடந்த 7ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.




மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி ஈசனை வழிபட்டு மயில் உரு நீங்கி சாபவிமோசனம் பெற்று இறைவனுடன் சேர்ந்ததாக பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கி கொண்டதாக ஆன்மிக புராணங்கள் கூறுகின்றன.




எனவே ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் சாமி புறப்பாடு இன்றி அஸ்திரதேவர் மட்டும் காவிரி துலா கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு துலா உற்சவம் நடந்தது. இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் சாமி வீதியுலா செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கடைமுக தீர்த்தவாரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.




இந்நிலையில் காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, உடல் ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்காக மனம் இரங்கிய இறைவன், ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்தார். 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க 


அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1 ஆம் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் இருந்து மனோன்மணி உடனாகிய சந்திரசேகர சுவாமி காவிரி துலாக்கடத்திற்கு எழுந்தருளினார். அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நடைபெற்று தீர்த்தவாரி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.


மன்னார்குடியில் புதிய சேமிப்பு கிடங்கை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்