விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் இல்லத்தரசிகளின் ஏகோபித்த வரவேற்பைம் பெற்ற தொடர். இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். இந்த நிலையில் திடிரென அவர் நடித்த  கதாபாத்திரத்தில் இனி அவருக்கு பதிலாக வினுஷா நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியது ஏன் என்ற விளக்கத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 






 


அந்த வீடியோவில், “ என்னலா பாரதி கண்ணம்மா தொடரில் சில காரணங்களால் தொடர முடியவில்லை. இந்த முடிவு உங்களை கஷ்டப்படுத்தியிருந்தால் சாரி.. உங்களோட சப்போர்ட் இல்லனா நான் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது. இதே மாதிரியான சப்போர்ட் வரும் காலத்தில் தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் அதில் பேசியுள்ளார்.


பாரதி கண்ணம்மா தொடரில் வினுஷா நடித்த ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், டாக்டர் படத்தின் பிண்ணனி இசையில், வினுஷா நீதிமன்றத்திற்குள் நுழைவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தத் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடியூபில் வீடியோக்களை காண