1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் இறுதித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்காத நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதும் தொற்று அதிகமானதும் பள்ளிகள் மூடப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. 


ஜனவரியில் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் பிப்ரவரியில் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாணவர்களுக்குத் திருப்புதல் தோ்வு நடத்தப்பட்டது. இதற்கிடையே புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது 


இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் வி.ஜி.சிவகாமி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். வருகைக் குறைவு, கட்டணம் செலுத்தாதது உள்ளிட்ட எந்தக் காரணங்களுக்காகவும் தேர்ச்சியை நிறுத்தக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார். 


இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின.





இந்த நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் இறுதித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி தேர்வு தொடங்குகிறது. மே 6 முதல் 13-ம் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண