மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மீண்டும் நடை திறக்கப்படுகிறது.


மகர விளக்கு பூஜைக்காக கோயிலின் நடை மீண்டும் நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை. மகரவிளக்கு பூஜைக்காக நாளை முதல் 2022 ஜனவரி 20ஆம் தேதி வரை   ஐயப்பன் கோயிலில் நடை திறந்திருக்கும். டிசம்பர் 31ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். தினமும் 60,000 பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறுவதால் அடிப்படை வசதிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


முன்னதாக, கார்த்திகை மாதம் திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 26ஆம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. சபரிமலையில் இரவு 10 மணியுடன் நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடந்த மண்டல காலம் நிறைவுபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். watch video | தேரை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்து செல்லும் மார்கழி சப்பரம் திருவிழா !


சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு 40 நாட்களில் இதுவரை 11 லட்சம் பேர்  தரிசனம் செய்துள்ளதாகவும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.78.93 கோடி என்றும் தேவசம் போர்டு தகவல் கூறியது குறிப்பிடத்தக்கது.




முன்னதாக,  சபரிமலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம்போர்டு அனுமதி கொடுத்தது. மேலும், பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 45,000இல் இருந்து 60,000 ஆக அதிகரிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது. எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் 38 கிலோ மீட்டர் தொலைவுள்ள பெருவழிப்பாதையும் திறக்கப்பட்டது. பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியில் உள்ள வனப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் சன்னிதானத்தில் இரவில் தங்குவதற்கு அனுமதி தரப்பட்டது. பம்பை ஆற்றில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: பெருவெள்ளத்திலும் நிலைத்து நிற்கும் சிவலிங்கம் - பாலாற்றில் நிகழ்ந்த அதிசயம்


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண