விஜய் டிவியில்  ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முல்லையாக நடித்த விஜே சித்ராவின்  புகைப்படத்தை நெஞ்சில் டாட்டுவாக குத்திய ரசிகர் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலமானதற்கு கதிர் – முல்லை ஜோடி ஒரு முக்கியக்காரணம் என்றே கூறலாம். மாமாவின் மகளாக வரும் முல்லையை எப்போது பார்த்தாலும் சண்டையிட்டு கொண்டே இருப்பார் கதிர். எதிரும் புதிருமாக இருக்கும் இவர்களுக்கு எதிர்பாராதவிதமாக திருமணம் நடைபெறுவது போன்று கதைக்களம் அமைந்திருக்கும். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதோடு அவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் ரொமான்ஸ் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.



இதனையடுத்து பாண்டியன் ஸ்டோரில் முல்லைக்கதாபாத்திரத்தில் வந்த விஜே சித்ராவிற்கு தமிழகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. சீரியலில் மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டிவாகவே இருப்பார். அவர் என்ன செய்தாலும் ட்ரெண்டிங் மற்றும் வைரலாக தான் இருக்கும். அந்தளவிற்கு மக்கள் மனதில் இடம் பெற்றதோடு முல்லையாகவே வாழ்ந்து வந்தார் என்று தான் கூற வேண்டும்.


குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்போது கதிரும்- முல்லையும் அவர்களின் திருமண உறவை ஆரம்பிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் நடிகை சித்ராவிற்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மிகப்பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



இவர்களின் நிச்சயதார்த்தையடுத்து ஹேம்நாத் மற்றும் சித்ரா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஸ்பார்டில் எடுத்த புகைப்படங்களையெல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டுவந்தனர். இப்படி இருவரும் சந்தோசமாக இருந்துவந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில்தான், அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது விஜே சித்ராவான விஜய் டிவியின் முல்லையின் தற்கொலை செய்தி. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக வந்த  தகவல் சித்ராவின் குடும்பத்தை மட்டுமில்லாது, முல்லையின் ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது.


நிச்சயதார்த்தம் ஆன 3 மாதங்களிலேயே ஏன் இவர் தற்கொலை செய்துக்கொண்டார்? காரணம் என்ன? என்பது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை விஜே சித்ராவின் மரணம் மர்மமாகவே உள்ளது. தற்போது முல்லை உயிரிழந்து ஓராண்டு ஆனபோதும் இன்னமும் முல்லையின் முகத்தை யாராலும் மறக்கவே முடியவில்லை. முதலாம் ஆண்டு நினைவுத்தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் முல்லையின் புகைப்படத்தை பதிவிட்டு கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.






இந்த நிலையில் தான் தீவிர ரசிகரான ஒருவர், மறைந்த விஜே சித்ரா தனது நிச்சயதார்த்த விழாவில் எடுத்த புகைப்படத்தை தனது மார்பில் டாட்டுவாக குத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ சித்ராவின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.



சின்னத்திரையில் விஜே சித்ராவாக அறிமுகமான இவர், பல சீரியல்களில் நடித்திருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.