வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வழியே பாயும் பாலாற்றில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையால் பெய்து வந்த தொடர் கன மழையினாலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரினாலும், குடியாத்தம் நகருக்குள் பாயும் கவுண்டன்ய மகாநதி, மற்றும் மேல்பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் பள்ளிகொண்டா பாலாற்றில் வரலாறு காணாத அளவில் சுமார் 80 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளிகொண்டா பாலாறு பாலத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாலாற்றின் நடுவில் தென்னை ஓலையில் குடிசையாக கட்டப்பட்ட சிறிய சிவன் கோவில் அமைந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பக்தியுடன் வணங்கிவருகின்றனர்.




இக்குடிசை கோவிலானது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதி பாலாற்று மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கையில் கல் போன்ற ஒரு பொருள் பெரியதாக தெண்பட்டுள்ளது. இதனை சிறுவர்கள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல் அறிந்து சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் சென்று பார்த்த போது அங்கு சிவன் லிங்க வடிவிலான மரகதம் சிலைகளை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலாற்று மணலில் கண்டெடுத்த சிவலிங்கத் பொது மக்கள் ஆராய்ந்த போது இச்சிலைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் அடிப்படையில் இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையாக  இருக்கலாம் என்று கருதப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பாலாற்றின் நடுப்பகுதியிலேயே கம்புகளை கொண்டு ஒரு தென்னை ஓலை குடிசை அமைத்து அதில் கண்டெகுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்களால் கோயிலாக பராமரிக்கப்பட்டு வழிபட்டு வருகின்றனர். மேலும் இதற்க்கு ஆதி பரமேஸ்வரி கோயில் என்றும் பெயரிடப்பட்டு தினமும் ஆராத்தி, அபிஷேகம், பூஜைகளையும் செய்து வருகின்றனர்.




 
இந்நிலையில் கடந்த மாதம் வரலாறு காணாத அளவிற்கு பள்ளிகொண்டா பாலாற்றில் சுமார் 80 ஆயிரம் கனஅடிக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பாலாற்றின் கரையோரம் இருந்த சிமெண்ட் சீட் வீடுகள், மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. பல இடங்களில் தரைப்பாலங்களும் அடித்து செல்லபட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்படியான சூழலிலும் பாலாற்றின் நடுவே ஓலைக் கொட்டகையால் (குடிசை) அமைக்கப்பட்ட ஆதி பரமேஸ்வரி சிவன் கோயிலையும் முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்து ஓடியது ஆனால் ஓலைக்குடிசையில் அமைக்கப்பட்ட சிவன் கோயில் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாலாற்று வெள்ளத்தின் நடுவே நங்கூரம் பாய்ச்சியது போல் கொஞ்சமும் அசையாமல் நிலைத்து நின்றுகொண்டிருந்தது.




 
மேலும் கோயிலைச் சுற்றி இருந்த வேப்ப மரங்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நிற்கின்றது. தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் சிவன் கோவில் கமைந்துள்ள பகுதி மணல் மேடாகி தீவு போல் காட்சி அளிக்கிறது. இச்செயலை பார்த்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் பக்கதர்கள் ஆச்சரியமடைந்து. இயற்கையாகவே கடவுள் என்ற நிலையில் எத்தகை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டாலும் கடவுளை எதுவும் செய்து விடாது என்று பக்தர்கள் மெய்சிலித்துள்ளனர்.