Guru Peyarchi 2022: ஜோதிட பலன்களில் குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு, கேது பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக, குருப்பெயர்ச்சி பலன்களை ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் விரும்பி பார்ப்பார்கள். இந்த நிலையில், 2022ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி வரும் ஏப்ரல் 14-ந் தேதி (பங்குனி 30) அன்று நிகழ உள்ளது.


இதுவரை கும்பராசியில் சஞ்சாரம் செய்து வந்த குருபகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு சென்று திரும்ப உள்ளார். 2022ம் ஆண்டு குருபகவானின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக ஆன்மீக நாட்டமுள்ளவர்களிடம் பார்க்கப்படுகிறது. குரு பகவான் இந்த முறை ஏப்ரல் 14-ந் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். இதனால், மிகுந்த பலன் உண்டாகும்.


பொதுவாக குருபகவான் அமர்ந்த இடத்தை விட அவரின் பார்வை படும் இடம் பலன் மிகுந்தாக இருக்கும். மிகவும் சிறப்பான நற்பலனைத் தரக்கூடியதாகவும் இருக்கும். குருவின் 5ம், 7ம், 9ம் மற்றும் 11ம் ஆகிய இடங்களை அவர் பார்ப்பதால் யோக பலன்கள் அந்த இடங்களுக்கு அமோகமாக இருக்கும். ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள குருபெயர்ச்சியால் கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ராசியினருக்கு யோகம் பலமாக கிட்டும்.


கடகம் ( 5ம் பார்வை):

ஏப்ரல் வரை குருவின் 6ம் பார்வை இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதன்பின்னர், குருவின் 5ம் பார்வை கடக ராசியினர் மீது படும். இதனால், அவர்களது வாழ்வில் பல்வேறு அற்புதங்கள் நிகழும். குரு பகவானும் பலன்களை வாரி வழங்குவார். நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் கிட்டும். உங்களின் வேலையில் நல்ல முன்னேற்றமும், நல்ல லாபமும் பெறுவீர்கள். முதலீட்டில் அதிக லாபம் கிட்டுவதுடன், வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.


கன்னி ( 7ம் பார்வை): 


ஏப்ரல் மாதம் வரை கன்னி ராசிக்கு குருவின் 8ம் பார்வை இருப்பதால் வேலை மற்றும் குடும்பம் என அனைத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏப்ரல் 14-ந் தேதிக்கு பின் கன்னி ராசி மீது குருவின் 7ம் பார்வைபடும். குருவின் 7ம் பார்வை படுவதால் உங்களின் நிதிநிலை மேம்படும், கடன், வழக்கு மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களின் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். குடும்பமே மகிழ்ச்சி கடலில் திளைக்கும். சிறப்பான வாழ்க்கைத் துணை உங்களுக்கு அமைவார்கள்.


விருச்சிகம் (9ம் பார்வை): 


ஏப்ரல் மாதம் வரை விருச்சிக ராசிக்கு 10ம் இடத்தில் அமர்ந்து ஓரளவு நற்பலன்கள் தரக்கூடிய குருபகவான், ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு 9ம் இடத்திற்கு மாறுகிறார். இதனால், குருவின் பார்வையை பெற்றிட முடியும். குருவின் 9ம் பார்வை படுவதால் உங்களின் எந்த முயற்சியும், செயல்களும் நல்ல வெற்றியைத் தரும். தடைகள் நீங்கி வேகமாக முன்னேறுவீர்கள். திருமண தடைகள் நீங்கி விரைவாக, நினைத்த மாதிரியான நல்ல வரன் அமையும். கனவு கைகூடும். காதல் விவகாரம் கைகூடும்.


மகரம் (11ம் பார்வை) :


மகர ராசிக்கு தற்போது 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருப்பது சாதகமான அமைப்பல்ல. தேவையற்ற செலவுகள், விரயங்கள் தற்போது ஏற்பட்டு வரும். ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு பின்னர் உங்கள் ராசி மீது குருவின் 11ம் பார்வை விழும். இதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். எந்தவொரு செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.


Also Read | Guru Peyarchi 2022: குருபெயர்ச்சியால் எந்த ராசிக்காரருக்கு கோடீஸ்வர யோகம்..? உங்களுக்கு என்ன பலன் தெரியுமா..?