திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அதேபோல பழனி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


மேலும் படிக்க: Sawan 2022 : வாழ்வில் மகிழ்ச்சி.. திருமண தடை விலகும்.. சோமவார விரதத்தின் பல பலன்கள்!




நேற்று முன்தினம் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதற்கு ஏதுவாக வார விடுமுறை உள்ளதால் கார்த்திகை தினத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.


மேலும் படிக்க: செல்வம், ஆரோக்கியம்.. வியாழக்கிழமை பூஜை, விரதம், பரிகாரம் குறித்த நம்பிக்கைகள்..


அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளாபூஜை, சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும்‌ பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


 




பக்தர்களின் வசதிக்கா இயக்கப்படும் ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்புப்பணி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மின்இழுவை ரயில்‌நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் மூன்றாவது மின்இழுவை‌ ரயிலும்  பழுது ஏற்பட்டு‌ திடீரென நிறுத்தப்பட்டதால் இரண்டு மின் இழுவை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. ஏற்கனவே ரோப்கார் இல்லாதநிலையில் தற்போது மின்இழுவையிலும் ஒன்று பழுதானதால் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும்‌நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறானி பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.


மேலும் படிக்க: Rasipalan Today, 25 july : ரிஷபத்துக்கு அமோகம்...! கடகத்துக்கு மகிழ்ச்சி...! அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி..?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண