நாள்: 25.07.2022
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம 3 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே,
இந்த நாள் உங்கள் வாழ்வில் நல்ல நாள் ஆகும். இரக்கக் குணத்துடன் செயல்படுவீர்கள். ஈகைச் செயல்கள் புண்ணியத்தை தரும். குடும்பத்தில் சந்தோஷம் கிட்டும், திருமண காரிய சிக்கல்கள் நீங்கும். நன்மைகள் அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாள் ஆகும். நீண்டநாள் வசூலாகாத கடன் வசூல் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருவாய் இருமடங்காகும். புதிய ஆர்டர்கள் கிட்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமையும் யோகம் உண்டு. கவிஞர்களுக்கு பாராட்டுகள் கிட்டும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு லாபகரமான நாள் ஆகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிட்டும். நல்லவர்கள் நட்பால் நன்மதிப்பு ஏற்படும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல் தீரும். சொத்து பிரச்சினை சுமூகமாக முடியும். காதல் திருமணத்தில் கைகூடுவதற்கு வாய்ப்பு உண்டு.
கடகம் :
கடக ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாள் ஆகும். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் உண்டாகும். பெரியவர்கள் சொல்கேட்டு நடப்பீர்கள். திருமணத் தடைகள் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே,
இந்தநாள் உங்களுக்கு உற்சாகம் பிறக்கும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். கடின உழைப்புக்கு தக்க பலன் கிட்டும். உங்களது சாமர்த்தியத்திற்கு தக்க பாராட்டு கிட்டும். உங்கள் மதிப்பும் செல்வாக்கும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மத்தியில் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு சற்று மனக்கவலை ஏற்படும். எந்த செயலுக்கும் நீங்கள் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். காசி விஸ்வாதரை வழிபட்டு மன அமைதி பெறலாம். அடுத்தவர் விவகாரத்தை நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு சற்று சிரமம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். பணிபுரியும் இடத்தில் அமைதியுடன் செயல்படுவது நல்லது, வெளியூர் பயணத்தை ஒத்திவைப்பது சிறப்பாகும். முக்கிய விவகாரங்களை எடுப்பதை ஒத்திவைப்பது நல்லது ஆகும். வீண் வாக்குவாதத்தில் யாருடனும் ஈடுபடக்கூடாது.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே,
இந்தநாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த ஆதரவு குடும்பத்தாரிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் கிடைக்கும். பெரியவர்கள் சொல் கேட்டு நடப்பீர்கள். விநாயகப் பெருமானை வணங்கி எந்தவொரு காரியத்தையும் தொடங்கவும். கவலைகள் அகலும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள் ஆகும். மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பாக அமையும். ஆசிரியர்களுக்கு விருதுகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள் ஆகும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு ஆரோக்கியமான போட்டி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்தரப்பில் இருந்து நெருக்கடி அதிகரிக்கும். சமயோசிதமாக செயல்பட வேண்டும். சிவபெருமானை வணங்கினால் சிறப்பு காணலாம். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. பெரியவர்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே,
இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வீண் வாக்குவாதத்தில் சிலர் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். அமைதியுடனும், பொறுமையுடனும் கையாள வேண்டும். பண விவகாரத்தில் கவனம் தேவை. சிந்தையில் எம்பெருமானை வணங்கி துணிவுடன் செயல்பட வேண்டும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே,
இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாள் ஆகும். உங்களது மதிப்பும், அந்தஸ்தும் உயரும் நாள். குடும்பத்தினர் உங்கள் சொல்படி செயல்படுவார்கள். சுபகாரியங்கள் வீட்டில் உண்டாகும். மங்கல ஓசைகள் கேட்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்