திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 300 ஆண்டுகள் பழமையான மகாலட்சுமி கோவிலில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே உச்சணம்பட்டி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவில் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் திருவிழாவிற்கு மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் பூர்வீக கிராமத்திற்கு வந்து குடில் அமைத்து மூன்று நாட்கள் தங்கி கொண்டாடுவார்கள்.

மேலும் படிக்க: Rasipalan Today, June 23 : ரிஷபத்துக்கு அனுபவம்; விருச்சிகத்துக்கு லாபம்... உங்க ராசிக்கு எப்படி?

மேலும் படிக்க: Exclusive: மாலத்தீவு யோகா தின தாக்குதல்: கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்தது அம்பலம்... போலீஸ் அதிர்ச்சி அறிக்கை!

 

 

நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் இரவு விஷேச அபிஷேக ஆராதனை மற்றும் விளக்குபூஜை நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சுமார் நாற்பது நாட்கள் விரதமிருந்து பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் அருள்நிறைந்த பூசாரி  தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேற்றிக்கடனை நிறைவேற்றினர். இந்த விழாவால் அந்தப்பகுதியே உற்சாக காணப்பட்டது. மேலும், காவல்துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்க: OPS Tweet : தொடங்குகிறதா தர்மயுத்தம் 2.0? அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பதிவிட்ட பரபரப்பு ட்வீட்..


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண