நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



நிலநடுக்கம்:


நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 161 கிமீ தூரத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கம்  சரியாக காலை 03:41:51 IST மணியளவில் பதிவாகியுள்ளது. இதன்  நீளம்: 83.81, ஆழம்: 66 கிமீ ஆகும்  .






இரண்டு வாரத்திற்கு முன்பு :


நேபாளத்தில் உள்ள பக்தாபூர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். நேபாளம், பக்தாபூர் சங்குநாராயண் கோயில் பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (National Center for Seismology (NCS) ) தெரிவித்துள்ளது. NCS என்பது  நிலநடுக்க நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும்.இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது பொருள் சேதமோ , உயிர் சேதமோ இல்லை .





நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?


நிலநடுக்கம் என்பது பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகரிக்கும் பொழுது, ஒருவித எனர்ஜி உருவாகி அது தளத்தில் இருக்கும் தட்டுகளில் ஒருவித அதிவுகளை உருவாக்கும். இந்த தட்டுகளை ஆய்வாளர்கள் டெக்டோனிக் தட்டுகள் என அழைக்கின்றனர். இது பொதுவாக புவியின் மேற்பரப்பில் உள்ள கடினமான பாறைகள்  ஆறுகள் அல்லது கடல்களால் உடைக்கப்பட்டு படிமங்களாக புவியின் அடியில் சேகரிக்கப்படுகின்றன. இவைதான் டெக்டோனிக் தட்டுகளாக மாற்றமடையும். இந்த டெக்டோனிக் சிறிது காலங்களுக்கு பிறகு இயல்பாக நகர துவங்கும் பொழுது ஒன்றோரோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு நிலநடுக்கத்தை உண்டாக்குகிறது. ரிக்டர் அளவுகோலில் அதிர்வு மூன்றுக்கும் கீழாக இருந்தால் அந்த நிலநடுக்கத்தை நம்மால் உணர முடியாது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண