திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனம் செய்ய வருவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து திருப்பதி வர நினைப்பவர்களுக்கு அரசு புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை பொதுமக்களின் பேராதரவோடு மிக சிறந்த முறையில் செய்து வருகிறது. இந்நிலையில் இனிமேல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மற்ற முக்கிய நகரங்களில் இருந்தும் இந்த சுற்றுலாவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை போன்ற இடங்களில் தினசரி திருப்பதி சுற்றுலா ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது.




மேலும் தற்போது, சென்னையிலிருந்து திருப்பதிக்கு குளிர்சாதன வசதியுடன் சுற்றுலா சொகுசு பேருந்து தினசரி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கி வருகிறது. இந்த சுற்றுலா பேருந்தை தமிழகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக திருச்சியிலிருந்து திருப்பதிக்கு குளிர்சாதன வசதியுடன் சுற்றுலா சொகுசு பேருந்து  தினசரி இயக்கப்படுகிறது. இந்த திட்டம் வருகிற 8-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், இருவேளை சைவ உணவு மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் உள்பட கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.3,300-ம், சிறுவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலா சொகுசு பேருந்தில் பயணம் செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளமான www.ttdconline.com-ல் சுற்றுலா பற்றிய விவரங்கள் மற்றும் முன்பதிவையும் செய்து கொள்ளலாம் என சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண