சென்னை எக்மோர் ரயில் நிலையத்தை நடிகர் ஆதி புகைப்படம் எடுத்துள்ளார்.  அது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிளாக் அண்ட் வொயிட் வந்திருக்கும் அந்தப்புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவாசிகளின் பாராட்டுகளை பெற்று வருகிறது.


  







தென்னிந்திய சினிமாவில் சைலண்ட் காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி . இவர்கள் ‘மரகதநாணயம்’ படத்தில் ஒன்றாக நடித்தனர்.அதன் பின்னரும் ஓரிரு தமிழ் படங்களில் நடித்த இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்கள் அதை நீண்ட நாட்களாக மறைத்தே வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 


அதனைத்தொடர்ந்து இந்த விஷயத்தை பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் தரப்பில் இருந்தும் கீரின் சிக்னல் கிடைத்தது. இதனையடுத்து இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், கடந்த மே மாதம் 18 ஆம் தேதி இவர்களது திருமணம் எளிமையாக நடந்தது. இந்தத்திருமணத்தில் விக்னேஷ் சிவன், தெலுங்கு நடிகர்கள் நானி , சுதீப் கிஷன், இளையராஜா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. 


காதல் மலர்ந்த கதை 


இது குறித்து ஆதி கூறும் போது, எங்களுக்குள்ள லவ் ப்ரோபஸ் பண்ணியெல்லாம் யாரும் லவ்வ சொல்லல..எங்களோடது ரொம்ப போரிங்கான லவ் ஸ்டோரி என்கிறார். நிக்கி சொல்லும் போது இது ரொம்ப ஹானஸ்ட்டா, ரியலிஸ்டிக்கா, நேச்சுரலா நடந்த ஒரு பிராசஸ் என்றார். அவருடன் தொடர்ந்த ஆதி, நாங்க ஒரு 6, 7 வருடங்கள் நண்பர்களாக இருந்தோம்.


 






அப்பத்தான் ஒருத்தர் ஒருத்தர நல்லா புரிஞ்சிக்கிட்டோம். அப்ப இரண்டு பேருக்குமே இவங்க நம்ம வாழ்கை துணையா வந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. இரண்டு பேருமே நிறைய விஷயங்களை ஷேர் பண்ணோம். அப்படித்தான் எங்களோட காதல் மலர்ந்தது. பார்த்தவுடனேயெல்லாம் காதல் வரல.. இப்ப வரைக்கும் நாங்க ப்ரோபஸ் பண்ணிக்கிட்டதே இல்ல. அதுதான் உண்மை.” என்றார்