ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம். 


கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சினிமாத்துறைக்கு ஓடிடி தளங்கள் இன்றியமையாத பங்களிப்பை வழங்கி வருகின்றன. பெரிய படங்கள் மட்டுமல்லாது சிறு படங்கள் கூட ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல  வரவேற்பை பெற்று வருகின்றன.


 






முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் இயங்கி வரும் இந்தத்துறையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜூனின்  ‘ஆஹா’ ஓடிடி தளமும் சேர்ந்து கொண்டது. தொடர்ந்து தமிழிலும் வந்த இந்த தளத்தில்  ‘மன்மதன் லீலை’,  ‘ரைட்டர்’,  ‘மாமனிதன்’,  ‘கூகுள் குட்டப்பா’ உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இந்த நிலையில் அடுத்ததாக  'ஆஹா' ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படங்களில் பட்டியலை பார்க்கலாம். 


இந்த வார புதிய திரைப்படமாக, நடிகை ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த திரையரங்குகளில் வெளியான 
“மஹா” படம் வெளியாகிறது.


 


                       


இதனை தொடர்ந்து, இம்மாதம்  நடிகர் அருள்நிதி நடிப்பில், வெளியாகும் “டைரி” திரைப்படம் வெளியாகிறது. 


 


                             


இதனையடுத்து மஹத் நடிப்பில் உருவாகி வரும் எமோஜி திரைப்படம், ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஜீவி 2 படம் விரைவில் நேரடி வெளியீடாக ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.