மயிலாடுதுறையில் நகர் பகுதியில் ஆன்மீக புகழ்பெற்ற பழமையான காவிரி துலாக்கட்டம் உள்ளது. இந்த துலாக்கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும் துலாகட்ட காவிரியில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாக ஐதீகம். இந்த ஐதீக நிகழ்வானது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் துலா கட்டத்தில் எழுந்தருளி ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறும்.
குடும்பத்துடன் ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது - 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
இந்த நிலையில் இந்த காவிரி துலாக்கட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற காவிரி மகா புஷ்கரத்தில் பக்தர்கள் புனித நீராட புஷ்கர தொட்டி அமைத்த போது காலப்போக்கில் மறைந்த 12 புண்ணிய நீர் கிணறுகள் மீட்கப்பட்டது. 12 ராசிகளுக்கும் உரிய கிணறுகளாக கருதப்பட்டு அவை புதுப்பிக்கப்பட்டு காவிரி மகாபுஷ்கரவிழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அங்கு பல லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இந்த கிணற்று நீரில் பக்கதர்கள் நீராடினால் தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம் இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் ஐப்பசி மாதத்தில் வந்து புனித நீராடி செல்வர். இத்தகைய சிறப்பு மிக்க காவிரி துலாக்கட்டம் தற்போது மிகவும் மோசமான நிலையில் புல் புதர்களாலும், குப்பைகளாலும் மூடப்பட்டு கிடக்கிறது.
அரசுப்பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் - வீடியோ வைரல் ஆனதால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
மேலும், உடைந்த மதுபான பாட்டில்கள், அழுகிய பழங்கள், மருத்துவ கழிவுகளும் குவிந்து கிடந்தன. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் காவிரி துலாக்கட்டத்தை தூய்மை செய்யும் பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றனர். காவிரி துலாக்கட்டத்தை நகராட்சிதுறையினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், ஆன்மீக அன்பர்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இதன் மூலம் ஐப்பசி மாதம் மட்டும் இன்றி ஆண்டு முழுவதும் 12 ராசிகளுக்கும் உரிய கிணறுகளிலும் பக்தர்கள் புனித நீராட ஏதுவாக தண்ணீர் நிரப்பப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மருத்துவர் வீட்டில் 97 சவரன் கொள்ளை - தீரன் பட பாணியில் 2 கைரேகைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் போலீஸ்