தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் கடந்த ஜன.28ஆம் தேதி தொடங்கி பிப்.4 வரை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட நான்கு நகராட்சிகளுக்கும் மற்றும் நன்னிலம்,பேரளம், குடவாசல், முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், கொராடாச்சேரி ஆகிய ஏழு பேரூராட்சிகளுக்கும் என ஒட்டு மொத்தமாக 216 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 1418 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 264 பேர் மனு தாக்கல் செய்திருந்ததில் 133 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளுக்கு 193 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில், 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 189 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல், மன்னார்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 233 வேட்புமனுக்களில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 227 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 264 வேட்புமனுக்களில் 133 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 131 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல், கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகளுக்கு 145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 143 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பேரூராட்சியில்
பேரளத்தில் 12 வார்டுகளில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 75 வேட்புமனுக்களில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 72 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், நன்னிலம் 15 வார்டுகளில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 85 மனுக்களில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல், வலங்கைமான் பேரூராட்சியில் 70 வேட்புமனுக்களும், முத்துப்பேட்டையில் 92 மனுக்களும், குடவாசலில் 78 மனுக்களும், கொரடாச்சேரியில் 81 மனுக்களும்,, நீடாமங்கலத்தில் 97 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் 4 நகராட்சிகளில் உள்ள 111 வார்டுகளுக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்த 835 மனுக்களில் 145 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 690 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 7 பேரூராட்சிகளில் உள்ள 105 வார்டுகளுக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்த 583 மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 573 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்