சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் மூர்த்திங்கர் நகர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பெரியசாமி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் மூன்று மகன்களும் இருக்கின்றனர். பெரியசாமியின் மகன்களில் கோகுல கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். 


இந்த நிலையில் வீட்டை விற்று தரும்படி அண்ணன் கூறியதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கோகுல கண்ணனிடம் வினோத்குமார் பணம் திருடி விட்டதாகவும் இது சம்பந்தமாக இருவருக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 


இச்சூழலில் நேற்றிரவு கோகுல் மற்றும் வினோத்குமார் இருவருக்கும்  கைகலப்பு ஏற்பட்டு போதையில் இருந்த வினோத்தை கோகுல் பலமாக தாக்கினார். அப்போது அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ஆனால் இதை அறிந்துகொள்ளாமல் கோகுல் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து படுக்கை அறையில் சென்று தூங்கியுள்ளார்.




இதனையடுத்து காலையில் எழுந்து பார்க்கையில் வினோத் குமார் சுய நினைவில்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கோகுலும் அவரது தாயார் ஈஸ்வரியும் மது வாங்கி அருந்திவிட்டு இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர். யோசனையின்படி, வீட்டிலிருந்த ரத்த காயங்கள் மற்றும் கோகுல் அணிந்திருந்த உடைகளை மாற்றிவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் சென்றார். அதனையடுத்து வினோத்தை யாரோ அடித்துவிட்டார்கள். அதனால் அவன் வீட்டிற்கு வந்து இறந்துவிட்டான் என்று பொய்யாக அழுது புலம்பி இருந்திருக்கிறார். 


இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். 


முதல் கட்ட விசாரணையில் அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கைகலப்பில்தான் வினோத் இறந்துவிட்டதாகவும் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் மூத்த மகன் டெல்லி கணேஷ் என்பவர் படிக்கட்டில் விழுந்து இறந்துவிட்டதாகவும் தெரியவந்தது. மேலும் எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சக மாணவர்கள் முன் திட்டிய ஆசிரியர் - மாணவி தற்கொலை