குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படும் பங்குனி உத்திர விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பங்குனி உத்திரம் அன்று முருக பெருமானை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்துக்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது. இதைத் தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

வயல்வெளி வழியாக சடலத்தை எடுத்து செல்ல மறுப்பு - இறந்த பெண்ணின் உடலை ஒரு மணி நேரம் தோளில் சுமந்த உறவினர்கள்

அந்த வகையில் மயிலாடுதுறையில் பெண்கள் மட்டுமே பால்குடம் சுமந்து திருநேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்று.  கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவில் உள்ள மிக பழமையான ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பால்குட அபிசேக திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பால்குட  அபிஷேக விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால் குடம்  புறப்பாடு துவங்கியது,  பச்சை காளி, பவளகாளி ஆட்டத்துடன், மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க விரதமிருந்து காப்பு கட்டிக்கொண்ட ஏராளமான பெண்கள்  சக்தி பரவசத்துடன், பால்குடங்களை தலையில் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலை வந்தடைந்தனர். 

TN Budget 2022 Highlights: திமுக அரசின் முழுமையான முதல் பட்ஜெட் - சிறப்பம்சங்கள், முக்கிய அம்சங்கள் என்ன..?

முன்னதாக பால் குடம் சுமந்து வந்தவர்களை வழியெங்கும் முருக பெருமானை  வழிபடும் தெருவாசிகளும், குலதெய்வமாக முருகனை வழிபடும் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். பின்னர் கோயிலை வந்தடைந்த பால்குடம் மேளதாளம் மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பாலாபிசேகம் நடைபெற்றது. 

குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 நிதியுதவி அறிவிப்பு இடம்பெறவில்லை - ராமதாஸ் வருத்தம்

இக்கோயிலில் பெண்கள் மட்டுமே விரதம் இருந்து பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்துவருவது ஐதீகம், மேலும் இந்த கோயிலில் பெண்கள்  பால்குடம் எடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்றும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், மேலும் விரதம் இருந்து பால்குடம் எடுப்பவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் இக்கோயில் ஏராளமான  பக்தர்கள் சுப்பிரமணியன் முருகப்பெருமானை தரிசித்து வழிப்பட்டு சென்றனர்.