By: ABP Tamil | Updated at : 25 Mar 2021 05:16 PM (IST)
அனன்யா குமாரி அலெக்ஸ்
கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் போட்டியிடுகிறார். வானொலி வர்ணனையாளர், ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர்.
திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ், ஜனநாயக சமூக கட்சியின் சார்பில் வெங்கரா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் அதிக செல்வாக்கைப் பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தலைவர் குஞ்சாலி குட்டி உடன் மோதவிருக்கிறார். கல்வியறிவு அதிகம்பெற்ற மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இதுவரை மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் தான் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததாக அனன்யா குமாரி தெரிவித்தார்.
கேரளாவின் எர்ணாக்குளத்தில் அண்மையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவை தொகுத்து வழங்கியவர் அனன்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கை என தன்னை உணர்ந்தபிறகு, சொந்த குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட அனன்யா திருநங்கை மேக்கப் கலைஞரான ரெஞ்சு ரெஞ்சிமாரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். ’தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன் எங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வேண்டுவதை விடவும், நாங்களே குரல் எழுப்புபவர்களாக இருக்க வேண்டும் என்பதாலேயே தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி, சாதி, மதம் போன்றவற்றைக் கடந்து சிந்திக்கும் கேரள மக்கள் என்னையும் மனதார ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்’ எனக் கூறினார்.
சேலத்தில் ராமதாஸ் தரப்பு கூட்டம் ; அன்புமணி மீது குற்றச்சாட்டு !! பாமக வழக்கறிஞர் பதிலடி
10 அமைச்சர்கள் முன்னிலையில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை: 8 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை! பொது கமிட்டிக்கு அனுமதி கிடைக்குமா?
நுகர்பொருள் வாணிப கழகத்தில் 1,400 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் தகவல்
விஜய் கடைசி படம்: கேரளாவில் அதிகாலை காட்சி ரத்து! ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சம், காரணம் என்ன?
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!