உசிலம்பட்டி 58 கால்வாயின் கடை மடை கண்மாய்க்கு வைகை நீர் கொண்டு செல்லப்பட்டதை கொண்டாடும் விதமாக விவசாயிகள், கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
கண்மாய் கரையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்த பைரவர் மற்றும் சடச்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
உசிலம்பட்டி பகுதி மதுரை மாவட்டத்தில் மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. இதைத் தாண்டியும் பல இடங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பெரும் பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது. எஞ்சி இருக்கும் சிலரும் விவசாயம் கைவிடும் சூழலில் இருந்து வருகிறது. இதனால் தண்ணீரை உசிலம்பட்டி பகுதி மக்கள் முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி 58 கால்வாயின் கடை மடை கண்மாய்க்கு வைகை நீர் கொண்டு செல்லப்பட்டதை கொண்டாடும் விதமாக விவசாயிகள், கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் 58 கால்வாய்க்கு பாத்தியப்பட்ட 33 கண்மாய்கள் மற்றும் இரண்டு குளங்களுக்கும் சென்றடைந்ததையடுத்து தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 33 கண்மாய்களில் கடைமடை கண்மாயாக உள்ள சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழித்தடத்தில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது.
58 கால்வாயின் அனைத்து கண்மாய்களுக்கும் நீரை கொண்டு சென்று இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி தர விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த சூழலில் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து சடச்சிபட்டி கண்மாய்க்கு வரும் வழித்தடதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் கொண்டு சென்று கண்மாயை போதுமான அளவு நிரப்பி கொடுத்துள்ளனர். 58 கிராம கால்வாயின் கடைமடை கண்மாய்க்கும் நீர் கொண்டு சென்றதற்கும், சடச்சிபட்டி கண்மாய் 35 ஆண்டுகளுக்கு பின் ஓரளவு நிரம்பியதை கொண்டாடும் வகையில், இந்த கண்மாய் கரையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்த பைரவர் மற்றும் சடச்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்று அனைத்து கண்மாய்களுக்கும் வைகை நீரை கொண்டு வர இயற்கை ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - IAF Agniveer Recruitment 2024:விமானப் படையில் பணி;விண்ணப்பிக்க நாளையே கடைசி - மறந்துடாதீங்க!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Valentine's Day: எந்த ஜாதகரின் காதல் திருமணத்தில் முடியும்? காதலில் வெற்றி பெற பரிகாரம் உண்டா?
Car loan Information:
Calculate Car Loan EMI