கொடைரோடு அருகே தொடர் நோய் தாக்குதல் காரணமாக பன்னீர் ரோஜா சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதால் மருத்துவ குணம் கொண்ட பன்னீர் ரோஜா சாகுபடியை மீட்டெடுக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பன்னீர் ரோஜா என்பது இளஞ்சிவப்பு ரோஜாவின் வகை மற்றும் நல்ல வாசனை மற்றும் நறுமணம் கொண்டது. இது மங்கள பூஜை சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழாக்களில் பன்னீர் ரோஜாக்களின் மாலைகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவ குணமும் கொண்டது. தென்னிந்தியாவில், இது மாலைகளிலும், பன்னீர் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், ரோஜாக்களில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகம். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்ட ரோஜாக்கள் மிகவும் உண்ணக்கூடிய முதல் பத்து மலர்களில் ஒன்றாகும். உங்கள் ரோஜா செடியில் பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்கள் தெளிக்கப்படாத வரை, அதை உட்கொள்வது பாதுகாப்பானது.
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மற்றும் சிறுமலை அடிவாரப் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட பன்னீர் ரோஜா சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகிறது. ராஜா தாணி கோட்டை அம்மையநாயக்கனூர், தர்மபுரி, புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த ஐந்தாண்டு காலமாக பன்னீர் ரோஜா செடிகளை விதவிதமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி பெருமளவு செடிகள் காப்பாற்ற முடியாமல் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது பன்னீர் ரோஜாவுக்கு பதில் டிங்டாங் எனும் பட்டுரோஜாக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இருப்பினும் நல்ல மருத்துவ குணம் கொண்ட பன்னீர் ரோஜாவிற்கு மார்க்கெட்டில் கிராக்கி இருப்பதால், ஒரு சில விவசாயிகள் பன்னீர் ரோஜா சாகுபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 20 கிலோ பூத்த பன்னீர் ரோஜா தற்போது இரண்டு கிலோ மட்டுமே கிடைப்பதாக கூறும் விவசாயிகள், செடியில் மொட்டுகள் அரும்பி அதில் 10 மொட்டுகளில் பெருமளவு மொட்டுகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விடுவதாகவும் இதனால் பூக்கள் உற்பத்தி கிடைக்காமல் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் விவசாயிகள் செடிகளில் கருகல் நோய் தாக்கி விடுவதால் செடிகள் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதால் பல விவசாயிகள் பன்னீர் ரோஜா விவசாயத்தை அழித்துவிட்டு மாற்று மலர் விவசாயத்திற்கு சென்று விட்டதா கூறுகின்றனர்.
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
பன்னீர் ரோஜாக்கள் அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளதாகவும், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் குங்குமப்பூவுக்கு இணையானது பன்னீர் ரோஜா எனவும் ஆஸ்துமா, சளி பிரச்சனைகளுக்கு பன்னீர் ரோஜா அருமையான சித்த மருந்து என கூறும் விவசாயிகள் முக்கிய ஆலயங்களில் பன்னீர் ரோஜா மாலைகளுக்கு நல்ல மவுசு இருப்பதாகவும் கூறுகின்றனர். எனவே அழிவின் விளிம்பில் உள்ள பன்னீர் ரோஜா விவசாயத்தை தமிழக அரசும் , தோட்டக்கலை துறையும் மீட்டெடுக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.