காவல்துறையின் அனுமதி மீறி கண்டன பேரணி நடத்தி  போராட்டம் நடத்தியதற்காக தல்லாகுளம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



 

மேலூரில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி , நரசிங்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு ஏலம் விடுத்துள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசு டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும், மேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முல்லை பெரியாறு ஒரு போகபாசன விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மேலூர் முல்லைப் பெரியாறு, ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி நேற்று மதுரை மேலூர் பகுதியில் இருந்து மதுரை மாநகர் தமுக்கம் தலைமை தபால் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

 

 


இதனையடுத்த நேற்று காலை 10 மணி அளவில் மதுரை மேலூர் பகுதியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலூர் தெற்குதெரு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் நடந்தபடி பேரணியாக வந்து நரசிங்கம்பட்டி பகுதியில் கூடியிருந்த விவசாயிகளோடு சேர்ந்து மதுரை மேலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடை பயணத்தை மேற்கொண்டனர். டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி நடைபெற்ற இந்த நடை பயண பேரணியில்  விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதிலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பேரணியாக வருகை தந்த போது மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில அரசு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு BAN TUNGSTEN என்ற பதாகைகளை ஏந்தியவாறு 20 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தனர்.இதேபோன்று மேலூரின் பல்வேறு பகுதிகளில் இருத்தும் 400 டிராக்டர்கள், சிறிய ரக லாரிகள் ஆகிய வாகனங்களிலும் பேரணியாக வருகை தந்தனர். இதனால் மதுரை மேலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதிலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

 



இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



 


5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன பேரணியாக 20க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் நடந்து மதுரை தல்லாகுளம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் முற்றுகையிட வந்தனர், காவல்துறையினர் பிஎஸ்என்எல் அலுவலகம் செல்லாதபடி தடுப்பு வேலைகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமுக்கம் தமிழன்னை சிலை முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர். காவல்துறையின் அனுமதி மீறி கண்டன பேரணி நடத்தி  போராட்டம் நடத்தியதற்காக தல்லாகுளம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.