தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகையில் வெல்லம் வழங்குமா? என எதிர்பார்ப்புடன் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கரும்பு விவசாயிகள். நிலையான விலை இல்லாத நிலையில், கரும்பு விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதால் தமிழக அரசு கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement


TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?


தேனி மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதியில் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்காமல் இருப்பதாலும், கரும்புக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கரும்பில் இருந்து வெல்லமாக காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். அதிலும் நவம்பர், டிசம்பர் மாததில் கேரளாவில் ஐயப்பன் கோவில் சபரிமலை சீசன் என்பதாலும் ஜனவரி மாதத்தில் தமிழர்களின்  திருநாளான தை பொங்கள் விழா நேரத்தில் அதிக அளவில் வெல்லம் விற்பனையாகும் எனபதால் கடந்த மாதம் முதல் வெல்லம் உற்பத்தியில் விவசாயிகள் தீவரிமாக ஈடுபட்டுள்ளனர்.


Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி


ஜனவரி மாதம் தமிழக முழுவதும் கொண்டாடப்படும் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெல்லத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பொங்கல் விழாவிற்காக கரும்பை வெட்டி வெல்லம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி இரவு, பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது . தற்போது வெல்லம் 42 கிலோ எடை கொண்ட மூட்டையின் விலை ரூபாய் 1800 முதல் 2200 வரை மட்டுமே விலை போயி வருவதால்  2500 ரூபாய் விலை கிடைத்தால் செலவு செய்த பணத்தை எடுக்க முடியும் என கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.




Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது


கரும்பு பயிரிட்டு 12  மாதங்கள் உரமிட்டு, நீர் பாய்ச்சி விளைவித்து அதனை வெட்டி வெல்லமாக தயாரித்தல் போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு இதற்கு ஒரு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசு  பொங்கல் பரிசு தொகையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெல்லத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அரசு பொங்கல் பரிசாக வெல்லத்தை வழங்கினால் தங்களுக்கு மேலும் விலை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதேபோல் தமிழக அரசு வெள்ளத்துக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.