தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இரு போகம் நெல் விவசாயம் செய்யக்கூடிய ஒரே மாவட்டம் தேனி மாவட்டம். தமிழகம், கேரள எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவதும் தேனி மாவட்டம்.


தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குகிறது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.


CAN vs IRE: டி20 உலகக் கோப்பை போட்டியில் மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம்! அயர்லாந்தை அலறவிட்ட கனடா..!




இப்பகுதியின் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டிவரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் விவசாயம் செய்து வருவது வழக்கம்.


”2019 தேர்தலை விட 1% அதிகம், இதுவே வெற்றி”.. தோல்வி குறித்து விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி!


இந்த மாதம் ஆரம்பத்தில் ஜூன் 1-ஆம் தேதி கம்பம் பள்ளதாக்கு பகுதி விவசாயத்திற்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பெறுத்து 120 நாட்களுக்கு சாகுபடிக்காக 200 கன அடி நீரும், குடிநீருக்கு 100 கன அடி நீரும் சேர்த்து 300 கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து இப்பகுதியில் விவசாய பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை செய்யப்படும் நெல் விவசாயத்தில் தற்போது முதல்போக நெல் சாகுபடி செய்வதற்கான  நாத்து நடுதல் , உழுதல் போன்ற பணிகள் தொடங்கியுள்ளன.




கடந்த இரண்டு வருடங்களில் முல்லை பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையிலும், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையாலும் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் முதல் போக நெல் சாகுபடிக்கான பணிகள் நடைபெறாமல் காலதாமதமாக நடந்தது.


Ramoji Rao: காலையிலேயே சோக சம்பவம்.. பிரபல தொழிலதிபர் ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்


இதனால் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பருவ மழை , பருவ சூழல் , நெல் ரகங்கள் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு வருடமாக இரண்டாவது போகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.


ஆனால் இந்த வருடம் ஜூன் முதல் வாரத்திலேயே முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த வருடம் இரண்டு போகம் நெல் விவசாயம் செய்யப்படும் என விவசாயிகள் கூறுவதுடன் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.