விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி புற்களை கவ்வியபடி விவசாயிகள் மனு

கடந்த 20 வருடமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கரகாட்டம் ஆடி வருகிறேன். ஆறு மாதங்கள் பணி இருக்கும். மற்ற மாதங்களில் வறுமையில்தான் தவிக்கிறோம்.

Continues below advertisement

தஞ்சாவூர்: விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு புற்களை கவ்வியபடி விவசாயிகள் மனு அளித்தனர்.

புற்களை கவ்வியபடி வந்த விவசாயிகள் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் புற்களை கவ்வியபடி மனு அளிக்க வந்தனர். மத்திய அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை. கட்டுப்படியான விலை அறிவிக்கவில்லை என கூறி அவர்கள் புற்களை கவ்வியபடி வந்தனர்.

பின்னர் மனு அளித்து விட்டு வெளியே வந்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமானது. வேளாண்மைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு செய்யவில்லை. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவரை காப்பாற்ற வேண்டும். 2024-ம் அண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை. விவசாய கடன் தள்ளுபடி இல்லை. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Continues below advertisement

தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்பொண்ணு (35). கரகாட்ட கலைஞர். இவரது கணவர் அமல்ராஜ். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் செந்தில்பொண்ணு அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;

கடந்த 20 வருடமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கரகாட்டம் ஆடி வருகிறேன். ஆறு மாதங்கள் பணி இருக்கும். மற்ற மாதங்களில் வறுமையில்தான் தவிக்கிறோம். எனது கணவர் கொத்தனாராக இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இப்போது பணிக்கு செல்ல முடிவதில்லை. எங்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அரசு விழாக்களில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கரகாட்டம் ஆடியுள்ளேன்.

பல மாதங்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறோம். வாடகை வீட்டில் வசித்து வருவதால் வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எங்கள் மீது கருணை காட்டி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்பொண்ணு (35). கரகாட்ட கலைஞர். இவரது கணவர் அமல்ராஜ். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் செந்தில்பொண்ணு அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;

கடந்த 20 வருடமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கரகாட்டம் ஆடி வருகிறேன். ஆறு மாதங்கள் பணி இருக்கும். மற்ற மாதங்களில் வறுமையில்தான் தவிக்கிறோம். எனது கணவர் கொத்தனாராக இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இப்போது பணிக்கு செல்ல முடிவதில்லை. எங்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அரசு விழாக்களில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கரகாட்டம் ஆடியுள்ளேன்.

பல மாதங்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறோம். வாடகை வீட்டில் வசித்து வருவதால் வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எங்கள் மீது கருணை காட்டி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola