ஸ்பீக்கரின் மூலம் அவருடைய குரலை போட்டு செக் செய்தனர். மாடுகள் மிரளுகிறதா? என்ன மாதிரியான விஷயங்கள் நடக்கிறது. என்று, பல்வேறு விஷயங்களையும் சீமான் ஆய்வு செய்தார்.
நாம் தமிழர் கட்சி - மேய்ச்சல் நிலங்களை மீட்க மதுரையில் மாநாடு நடத்துகிறது.
இயற்கை விவசாயம், விவசாயம் சார்ந்த உப தொழில்கள், ஆடு, மாடுகள் வளர்ப்பு, கோழிகள் வளர்ப்பு, பனை- தென்னை கள் எடுப்பது, என தற்சார்பு வாழ்வியல் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காடுகளில் ஆடு, மாடுகளை மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடுமாடுகள் உணவுகளுக்கு பாதிக்கப்படுகிறது. அதேபோல் கால்நடைகளின் உரிமையாளர்களும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகள் வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும். என்பதை, வலியுறுத்தும் படி ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள சீமான் திட்டமிட்டுள்ளார்.
மாடுகள் முன் பேச உள்ள சீமான்
அதற்காக ஆடு, மாடுகளிடம் குறைகளை கேட்டறிந்து, அரசிடம் சொல்லப்படும். என்பது படியாக இந்த மாநாட்டினை நடத்த உள்ளார். இந்த மாநாடு நாளை, மதுரை விராதனூர் பகுதியில் மாலை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களாக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதாவது மதுரை மாநகரிலிருந்து பத்து, பதினைந்து கிலோமீட்டர் தூரம் உள்ள, விராதனூர் பகுதியில் மாநாடு நடைபெறுகிறது. இது நடு முள் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள, நாட்டு வகை கிடை மாடாக இருக்கும் இடத்தில் சீமான் இந்த மாநாட்டை நடத்த உள்ளார். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதற்கு முன்பாக ஒரு மேடை அமைத்து மேடையில் இருந்து மாடுகளுக்க முன்பாக சீமான் பேச உள்ளார்.
வரலாற்றில் முதல் முறை
வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு மாநாட்டினை நாம் தமிழர் கட்சி நடத்தியது. என்று வரலாற்று குறிப்பில் இடம்பெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநாடு குறித்து ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சீமான் தன் தொண்டர்களுடன் வந்து, ஸ்பீக்கரின் மூலம் அவருடைய குரலை போட்டு செக் செய்தனர். மாடுகள் மிரளுகிறதா? என்ன மாதிரியான விஷயங்கள் நடக்கிறது. என்று, பல்வேறு விஷயங்களையும் சீமான் ஆய்வு செய்தார்.