மயிலாடுதுறையில் தமிழ்நாடுகள் கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தமிழகத்திக்கான காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வுகான முடியாது. தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் தற்போது உள்ள காவிரிநீர் தீர்ப்பு சாத்தியப்படாது அதற்கான புரிதல் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இல்லை. கர்நாடகாவின் வடிகாலாகத்தான் தமிழகம் இதுவரை இருந்து வருகிறது. ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்களுக்கான தமிழகத்திற்கு உரிய நீரை கேட்டுப்பெற வேண்டமென்று வலியுறுத்துகின்றனர். அதுபோல் வழங்கினால் இந்த பிரச்னைக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது.
காவிரிநீர் தினந்தோறும் பங்கீடு செய்யும் நடைமுறையை அமல்படுத்தினால் தான் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அணைகட்டி அவர்கள் தேக்கிகொள்வதற்கு கர்நாடகாவில் ஒருபோகம் சாகுபடி செய்துவிட்டனர். ஆனால், தமிழகத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. பனை, தென்னை கள் இறக்குவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. மதுபானங்கள் குடித்தால் கேடு இல்லையா? கள் குடித்தால் கேடு விளைவதாகவும், அதில் கலப்படும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எந்த உணவுப்பொருளில் கலப்படம் இல்லாமல் இருந்து வருகிறது. கலப்படத்தை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. அண்டை மாநிலங்களில் கலப்படங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 48 நாட்கள் ஒருபனை மரத்து கள்ளை அருந்தினால் பல நோய்கள் நீங்கும், அப்படி ஒரு மரத்தின் கள் கிடைக்காது பலமரத்தில் இருந்துதான் பெறமுடியும்.
பனை, தென்னை, ஈச்ச மரங்களில் இருந்து நீராகவோ, பதநீராகவோ, கள்ளாகவோ இறக்க அனுமதித்து அதனை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் தமிழகத்திற்கு அன்னியவருவாய் கிடைக்கும். தமிழகத்தின் பொருளாதர நிலையும் உயரும். கள் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் 2024 லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், ஏற்றத்தாழ்வு ஏற்படுவதை தவிர்க்க விவசாய உற்பத்தி செய்ய வேண்டியதற்கான இலக்கு, புள்ளி விபரங்கள் அரசிடம் இல்லாததால் அதிகமாக உற்பத்தி செய்தால் விலை குறைந்தும், உற்பத்தி குறைந்தால் அதிக விலைக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
Job Alert: பிரபல கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி; ஊதியம் எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?
ஆதீனங்கள் பல்லக்கில் ஏறி வீதியுலா சென்றால் அவர்களுக்கு மறுபிறவி உண்டு. பல்லக்கில் ஏறாமல் நடந்து வீதியுலா சென்றால் அவர்களுக்கு மறுபிறவி இன்றி மோட்சம் கிடைக்கும். அதனை பல ஆதீனங்கள் அறிவதில்லை” என்றார். உடன் காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் மற்றும் பலர் இருந்தனர்.