மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்காவில் மேல பருத்தி குடி கிராமம் உள்ளது. இங்கு நில உரிமைதாரர்களுக்கும், கூலி விவசாய தொழிலாளர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக விவசாய கூலி பிரச்னை நடந்து வருகிறது. இதனால் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நில உரிமையாளர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்து உள்ளார். இதனை எதிர்த்து விவசாய கூலி தொழிலாளிகள் அந்த நிலத்தில் இறங்கி, நெல் விதைகளை மிதித்து நாசப்படுத்தி உள்ளனர்.




அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?’ ஆலோசனை கூட்டத்திற்குப் பின் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!


இதனால் மற்ற நில உரிமையாளர்கள், முதல்வரே இந்த மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பை தொடங்கிவைத்து உள்ளார். ஆனால், விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பதை தடுக்க கோரி, மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு கொடுத்திருந்தனர். இதையொட்டி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றும், நேரடி நெல் விதைப்பு செய்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாய கூலிகள் ஒத்துகொள்ளவில்லை. 


 




திண்டுக்கல் - மயிலாடுதுறை, நெல்லை- ஈரோடு ரயில்கள் ஜூலை 11 முதல் இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி


மேலும், நேற்று மற்றொரு நில உரிமையாளர் தனது 5 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய பாதுகாப்பு கோரியதால், காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் மற்றும் தங்கவேல் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது. இதை தடுக்க வந்த விவசாய கூலி தொழிலாளர்களுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு இடையூறு செய்து பிரச்னையில் ஈடுபட்ட  50 விவசாய கூலி தொழிலாளர்கள் கைது  செய்யப்பட்டனர்.




Alia Bhatt Pregnancy Reactions: கர்ப்பமான அலியா பட்.. குவியும் வாழ்த்துகள்.. பறக்கும் ஹார்டின்கள்!


மேலும், இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட ஏழை கூலி விவசாய தொழிலாளர்கள் 44 பேர், ஆண், பெண், குழந்தைகள் என வித்தியாசமின்றி கல்நெஞ்சக்காரர்களால் பூட்டிய வீட்டினுள் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறி இன்றளவும் அது மாறாத வடுவாக இருந்து வருகிறது. தற்போது மீண்டும் அதே போன்று சூழல் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண