முப்போகம் சாகுபடி செய்த நிலையில் தற்பொழுது ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தங்களுக்கு குருவைத் தொகுப்பு திட்டம் போல் ஒருபோகம் மட்டுமே விவசாயம் செய்யும் தங்களுக்கு சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டுமென கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி கடைமடை பகுதி
மயிலாடுதுறை மாவட்டம் என்பது டெல்டா மாவட்டத்தின் காவிரி கடைமடை பகுதியாகும். அதிலும் மாவட்டத்தின் பெரும்பகுதி கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் காவிரி நீரும் பல நேரங்களில் எட்டாக்கனியாகவே மாவட்ட விவசாயிகளுக்கு இருந்து வருகிறது. மேட்டூரில் காவிரி தண்ணீர் திறந்தாலும், கடைமடை பகுதிக்கு உரிய நேரத்தில் போதிய தண்ணீர் வந்து சேர்வதில்லை. மேலும் காவிரி நீர் பல நேரத்தில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக உபரிநீராக திறந்து விடப்பட்டு பயனற்று கடலில் கலந்து வருகிறது.
கடற்கரையை ஒட்டிய பகுதி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, சீர்காழி தாலுக்கா ஆகிய இரண்டு தாலுக்காவிலும் விவசாயிகள் பெரும்பாலும் முப்போகம் விளைந்த நிலத்தில் தற்பொழுது ஒருபோகத்தையே நம்பியை தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் போர்வெல் செய்தால் உப்பு நீர் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்துவரும் நிலையில், காவிரி நீர் போதிய அளவு கிடைக்காததால் தற்போது மழையை மட்டுமே முழுவதுமாக நம்பி நெல் விவசாயம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
நேரடி நெல் விதை
மேலும் அவ்வபோது சிறு மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் சம்பா சாகுபடி துவங்கியுள்ளனர். தரங்கம்பாடி தாலுக்காவில் திருக்கடையூர், அனந்தமங்கலம், தில்லையாடி, பிள்ளைபெருமாள்நல்லூர், சீர்காழி தாலுக்காவில் கொள்ளிடம், ஆச்சாள்புரம், குதிரைகுத்தி, மாதானம், தாண்டங்குளம், புதுபட்டினம், நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை உழவு செய்து நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் விதைத்து முளைத்து வளருவதற்கு மழை பொழிய வேண்டி காத்துள்ளனர்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை நடைபயணம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு
சம்பா தொகுப்பு திட்டம்
இந்நிலையில் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்ட திருக்கடையூர் விவசாயி ராமமூர்த்தி கூறுகையில்; ஒருபோக சாகுபடியில் ஈடுபடும் தங்களுக்கு அரசு சார்பில் அனைத்து மானியங்களும் முறையாக கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குருவை தொகுப்பு திட்டம் போன்று சம்பா தொகுப்பு திட்டத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும், உழவு மானியம், விதை மானியம், உரம் மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் சம்பா நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுள்ள தங்களுக்கு போதிய மழை வேண்டும், மழை இல்லை என்றால் இந்த ஒருபோகமும் என்ன ஆகுமோ என்ற கவலையில் தான் தற்போது நெல் விதைப்பை தொடங்கியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.