Emergency Medicine: அவசர காலத்திற்காக எப்போதும் வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய மருந்து மற்றும் மாத்திரைகள் குறித்து இங்கு அறிவோம்.


அத்தியாவசிய மருந்துகள்:


 ஒரு நோய் எப்போது, ​​எங்கு தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வெளியில் எதிர்பாராமல் ஏதாவது நடந்தால் உதவிக்கு ஆட்கள் வரலாம் ஆனால் வீட்டில் யாருக்கேனும் ஏதேனும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு வழங்குவதற்கான சில அத்தியாவசிய மருந்துகளை கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, வீட்டில் முதலுதவிப் பெட்டியை ஏற்படுத்தி நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், முதலுதவிப் பெட்டியில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய மருந்துகளைப் பற்றிய விவரங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.


பொதுவாக பரவும் பாதிப்புகள்


வாயு, இருமல், சளி, வலி, காய்ச்சல், நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு, கருத்தடை மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்னைகள் பொதுவானவை. அத்தகைய சூழ்நிலையில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இவற்றில் சின்னச் சின்ன பிரச்சனைகளை வீட்டு முதலுதவி பெட்டி உதவியின் மூலம் எளிதாக கையாளலாம். 


இதையும் படியுங்கள்: Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?


முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய மருந்துகள்:


காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்து


பாராசிட்டமால் - இது மிகவும் பொதுவான மருந்து, இது ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கிறது. பாராசிட்டமால் வலி மற்றும் காய்ச்சலில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கிறது.


இப்யூபுரூஃபன் - கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் இந்த மருந்தை உட்கொள்ளலாம்.


அசெட்டமினோஃபென்- வீட்டில் குழந்தைகள் இருந்தால், வலி ​​மற்றும் காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இந்த மருந்தை முதலுதவி பெட்டியில் கண்டிப்பாக சேர்த்து வைத்துக்கொள்வ்து பல்வேறு சூழல்களில் உதவும்.


ஒவ்வாமைக்கான மருந்துகள் - முதலுதவி பெட்டியில் கண் மற்றும் மூக்கு ஒவ்வாமைக்கான மருந்து இருப்பதும் முக்கியம். இது தவிர, இருமல் மற்றும் சளிக்கு இருமல் சிரப், ஆன்டிபயாடிக், பேண்டேஜ், ஆண்டிசெப்டிக் க்ரீம், காய்ச்சலை அளக்க தெர்மாமீட்டர் ஆகியவற்றை வீட்டில் வைத்திருப்பது அவசியம்.


செரிமான பிரச்சனை மருந்து - அசிடிட்டி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகி தேவயான மருந்துகளை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.


பொறுப்புத் துறப்பு: செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள சில தகவல்கள் ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு விதமான செயல்திறன் கொண்ட மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, எந்தவொரு பரிந்துரையையும் செயல்படுத்துவதற்கு முன், நீங்கள் சரியான மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.