பழனி சுற்று வட்டார பகுதிகளான ஆயக்குடி, அமரபூண்டி, கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, சட்டப்பாறை உள்ளிட்ட இடங்களில் கொய்யா சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள தோட்டங்களில் விளைவிக்கப்படும் கொய்யா காய்கள், ஆயக்குடி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சந்தையில் கொய்யா காய்கள் தரம் பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
‛இது என்னுடைய வெற்றி அல்ல...’ வெளிப்படையாக புகழ்ந்த கமல்!
கொய்யா பழத்துக்கு பிரபலமான ஆயக்குடியில் தினமும் காலையில் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு கொய்யாவை வாங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக ஆயக்குடியில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் கொய்யா அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆயக்குடி சந்தைக்கு 'பனாரஸ்', 'லக்னோ' ஆகிய 2 ரக கொய்யா காய்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொய்யா ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. வியாபாரிகள் போட்டி போட்டு கொய்யாவை வாங்கி சென்றனர். இந்தநிலையில் சீசன் தொடங்கி உள்ளதால், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயக்குடி சந்தைக்கு கொய்யா வரத்து அதிகமாகி உள்ளது. இதனால் கொய்யா பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போது 20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொய்யா ரூ.200 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொய்யா விலை கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் காய் பறிப்பு கூலி, வண்டி வாடகை கட்டணம் கொடுக்க கூட வருமானம் கிடைப்பதில்லை. குறிப்பாக கொய்யா தோட்டங்களை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே சீசன் காலத்தில் கொய்யாவை இருப்பு வைத்து விற்கும் வகையில், ஆயக்குடியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்