டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் காவிரி தண்ணீர், மழைநீர் மற்றும் நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 2.20 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பா தாளடி நடவு பணிகள் பெரும்பாலான இடங்களில் முடிவடைந்துள்ளது. 




மயிலாடுதுறை மாவட்டத்தில் 282 கிராமங்களில் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 526 ரூபாய் ப்ரிமீயம் தொகை செலுத்தி பயிர்காப்பீடு செய்துகொள்ள வேண்டும். பயிர்காப்பீடு செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா அடங்கல், வங்கி பாஸ்புத்தகம் நகல், ஆதார்அட்டை நகல் ஆகியற்றை இணைத்து முன்மொழிவு விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுசேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்துகொள்ளலாம். 




காப்பீடு செய்யும் போது நிலத்தின் புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துகொள்ள வேண்டும். நடப்பாண்டிற்கு வரும் நவம்பர் 15ம் தேதி காப்பீடு செய்வதற்கு கடைசிநாள் என்றும், அதுவரை காத்திராமல் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் உடனடியாக விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் எனவும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட காப்பீட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளரை 9790004303 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.




இந்த சூழலில் கடந்த ஆண்டு 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 16 கோடியே 17 லட்சம் ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு தொடர்ந்து மழை வெள்ளங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தியதில் புள்ளியியல் துறை மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், 281 வருவாய் கிராமங்களில், 53 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் இழப்பீட்டு தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது என்றும்  228 கிராமங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை,




அரசு மற்றும் விவசாயிகள் பிரீமியம் தொகையாக 150 கோடி ரூபாய் கடந்த ஆண்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பணம் கட்டிய நிலையில் வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை புறங்கணித்து தமிழ்நாட்டில் அமைச்சர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை பயிர் காப்பீட்டு செய்து ஏமாற்றத்தை சந்தித்த பல விவசாயிகள் இம்முறை பயிர் காப்பீட்டு செய்ய முன்வர மாட்டார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


ELON MUSK-TWITTER: 12 மணி நேரம் வேலை, இல்லனா பணி நீக்கம் - ட்விட்டர் பணியாளர்களுக்கு மஸ்க் அதிரடி உத்தரவு?


ஸ்கையில் சூர்யகுமார் யாதவ்… அதிரடி பேட்டிங்கிற்கு முதல் இடம்! ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்!